தமிழக ஆளுநராக நடிகர் ரஜினி காந்த்தின் மனைவி லதா ரஜினியை நியமிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.
நடிகர் ரஜினி காந்த்துக்கு தமிழகத்தில் லட்சக் கணக்கான தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதனால் அரசியலில் அவரது ஆதரவை பெற பாஜக வெகு காலமாக முயன்று வருகிறது.
கடந்த சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்டு பாஜகவின் பல முன்னணி தலைவர்கள் முயற்சி செய்ததாகவும்
ஆனால், ரஜினியோ, கழுவுகிற மீனின் நழுவுகிற மீனாய், நமக்கு இந்த அரசியல் சரிபட்டு வராது என ஜகா வாங்கி விட்டதாகவும் கூறப் படுகிறது.
இந்நிலையில், இயக்குநர் ரஞ்சித்தின் கபாலி திரைப்படத்தில், ரஜினிகாந்த் மாறுபட்ட வேடத்தில், ஏழை, தாழ்த்தப் பட்டோர் பங்காளனாக நடித்திருந்தார்.
இதன் மூலம், ரஜினிகாந்த்துக்கு தலித் ஆதரவாளர் என்ற ஒரு பிம்பம் அறிந்தோ, அறியாமலோ விழுந்து விட்டது.
மீண்டும் ரஞ்சித்துடன்
ரஞ்சித்துடன் இணைந்து அவர் மீண்டும் படம் நடிக்க உள்ளார். அதில், தாழ்த்தப் பட்டோரின் ஆதர்ஷமான, இம்மானுவேல் சேகரன் கதாப் பாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் தாழ்த்தப் பட்ட மக்கள் மத்தியில் ரஜினி செல்வாக்கு உயர்ந்து கொண்டுள்ளது.
பாஜக பிம்பம்
அதே நேரம், பாஜகவோ உயர் ஜாதியினருக்கான கட்சி என்ற பிம்பத்தில் உள்ளது.
ரஜினியின் ஆதரவை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், தலித்துகளின் ஆதரவை மொத்தமாக பெறலாம் என்பதும் தங்கள் மீதான பிம்பத்தை உடைக்கலாம் என்பதும் பாஜக தலைவர்கள் சிலரின் ஐடியா.
சமூக சேவகர்
இதற்காக லதா ரஜினிகாந்த்தை தமிழக ஆளுநராக்கி ரஜினியின் ஆதரவை மறை முகமாக பெறலாம் என்பது பாஜக தலைவர்கள் திட்டம் என்று கூறப்படுகிறது.
லதா ரஜினிகாந்த் நீண்ட காலமாக சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். எனவே இதை காரணமாக கொண்டு ஆளுநராக்கலாம் என்பது கேம் பிளான்.
தேர்தல்கள் மீது கண்
வரும் நாடாளுமன்ற தேர்தல், அதன் பிறகான சட்டசபை தேர்தல் போன்றவற்றில், ரஜினி ரசிகர்கள் ஆதரவு பாஜகவுக்கு கிடைக்கும்.
இதை வைத்தே கூட்டணியில் அதிக இடங்களை பெற முடியும் என்றெல்லாம் மிகப்பெரிய திட்டத்தில் உள்ளதாம் பாஜக.
முடியாதே
அதேநேரம், இதில் இரு தடைக்கற்கள் உள்ளன. முதல் தடைக்கல், ரஜினி. எஸ்.. சாட்ஷாத் ரஜினியே தான். ஏனெனில், அரசியலில் இருந்து தன்னையும்,
குடும்பத் தாரையும் விலக்கி வைக்கவே ரஜினி தொடர்ந்து முயன்று வருகிறார். அவர் இந்த திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளவே மாட்டார் என்கிறார்கள், ரஜினிக்கு நெருக்கமானோர்.
மரபு இல்லை
மற்றொரு விஷயம், எப்போதுமே, ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்களை ஆளுநராக்கும் மரபு கிடையாது.
பக்கத்து மாநிலமான ஆந்திராவின் ரோசய்யா தமிழக கவர்னராகலாம், அண்டை மாநில கேரளாவுக்கு தமிழகத்து சதாசிவம் ஆளுநராகலாம்.
அதே மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் ஆக முடியாது. ஆனால் அரசியல் சாசனம் அப்படி எதையும் கட்டாயப் படுத்தவில்லை. இது மரபுதான் என்பதை அதை உடைப்பது பாஜகவுக்கு பெரிய விஷயம் இல்லை.
ஆனந்தி பென்னுக்கு வாய்ப்பு
என்ன முயன்றாலும் லதா ரஜினிகாந்த்தை சம்மதிக்க வைக்க முடியாது என்று தெரிந்தால், அடுத்த கட்டமாக, குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென்னுக்கு தமிழக ஆளுநராகும் யோகம் வாய்க்கலாமாம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஆனந்தி பென்னை ஆளுநராக் குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வில்லை என மத்திய அரசு
Tags: