எப்ஐஆர் பதிந்த 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் அது குறித்த தகவல்களை பதிவேற்ற வேண்டும் என அனைத்து மாநிலங் களுக்கும், யூனியன் பிரதேசங் களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் தலைமை யிலான அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இளம் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "எப்ஐஆர் பதிந்த 24 மணி நேரத்துக்குள் இணையத்தில் தகவல்களை பதிவேற்ற வேண்டும்.
அதே வேளையில் இணைய இணைப்பு குறைபாடுள்ள பகுதிகளில் 72 மணி நேரத்துக்குள் இணையத்தில் எப்ஐஆர் தகவல்களை பதிவு செய்யலாம்.
எல்லையில் ஊடுருவி யவர்கள், பாலியல் துன்புறுத்தலுக் குள்ளான பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளில்
எப்ஐஆர் தகவல்களை இணையத்தில் பதிய விலக்கு அளிக்கப் படுகிறது" எனத் தெரிவித் துள்ளது.
குற்றஞ் சாட்டப்பட்ட நபர் எப்ஐஆர் தகவல்கள் இணையத்தில் பதிவு செய்யப் படவில்லை என்பதை காரணம் காட்டி
சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளக் கூடாது என்பதாலே இந்த உத்தரவை பிறப்பிப் பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.