உத்தர பிரதேச மாநிலத் தில் கணவன் கண் முன்னே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டு உள்ளார்.
இச்சம்பவம் தொடர் பாக யாரும் இது வரையில் கைது செய்யப் பட்டு உள்ளது. உத்தபிரதேச மாநிலம் அனைத்து விதமான மோசமான காரணங்க ளுக்கும் தொடர்ந்து செய்தி யாகி வருவது தொடர் கிறது.
சமீபத்தில் சட்டப் பேரவையில் சமாஜ்வாடி அரசு தெரிவித்த தகவலில் மாநிலத் தில் கடந்த 5 மாதங்க ளில் மட்டும் 1,012 பாலியல் பலாத்கார வழக்கு கள் பதிவாகி உள்ளது என்று கூறியது.
மாநிலத் தில் 4,520 பாலியல் தொல்லை வழக்கும் பதிவாகி உள்ளது என்பதை அரசே ஒப்புக் கொண்டு உள்ளது.
இந்நிலை யில் மற்றொரு கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது, கணவன் கண் முன்னே இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டு உள்ளார்.
அலிகார்க் மாவட்டம் காஸ்காஞ் பகுதியில் கங்கையில் குளித்து விட்டு சைக்கி ளில் வீடு திரும்பிய தம்பதியினரை கும்பல் ஒன்று வழி மறித்து உள்ளது.
அப்போது கும்பல் இளம் பெண்ணை அவரது கண் முன்னே பாலியல் பலாத் காரம் செய்து உள்ளது. பின்னர் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளது. காப்பாற்ற முயன்ற வாலி பரையும் கும்பல் தாக்கி உள்ளது.
கத்திக் குத்து காயம் அடைந்த வாலிபர் அலிகார் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனும திக்கப் பட்டு உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக இது வரையில் யாரும் கைது செய்யப் படவில்லை. பாதிக்கப் பட்ட பெண்ணின் கணவர் முரண் பாடான தகவலை தெரிவித் ததாக கூறப்படு கிறது.
பாதிக்கப் பட்ட பெண் அவருடைய மாமியார் மற்றும் கணவரால் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப் பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது.