பெங்களூரில் பாதி எரிந்த பஸ்ஸை மீண்டும் எரித்த கும்பல் !

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலும் பெங்களூருவில் பாதி எரிந்த நிலையில் இருந்த எஸ்.ஆர்.எஸ். பேருந்தை வன்முறை கும்பல் நேற்று மீண்டும் தீ வைத்து வெறியாட்டம் போட்டுள்ளது.
பெங்களூரில் பாதி எரிந்த பஸ்ஸை மீண்டும் எரித்த கும்பல் !
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விட்டாக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்ட வட்டமாக உத்தர விட்டது. இந்த உத்தரவு செய்தி வந்தது தான் தாமதம் பெங்களூரு நகரில் தமிழர்கள் தேடி தேடி தாக்கப் பட்டனர்.

தமிழக நிறுவ னங்கள் எங்கெல் லாம் தென்படுகி றதோ அங்கெல் லாம் கல்வீச்சு சூறை... தமிழக வாகன ங்கள் தென் பட்டாலே போதும்... ஓடி ஓடி தாக்கி மகிழ்ந் தனர் வன்முறை யாளர்கள்..

ஒரே நாளில் தீக்கிரை

நேற்று முன்தினம் ஒரே நாளில் பெங்களூ ருவில் 25 லாரிகள், 52 பேருந்துகள் தீக்கிரை யாக்கப் பட்டன... நூற்றுக்கண க்கான வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன..

துணை ராணுவம்

பெங்களூர் டிம்பர் யார்டு பகுதியில் நிறுத்தப் பட்ட பேருந்துகள் ஒட்டு மொத்தமாக எரிக்கப்பட்டன. 
இதனைத் தொடர்ந்து 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டன. துணை ராணுவப் படை பாதுகாப் புக்கு குவிக்கப் பட்டது.

மீண்டும் எரிப்பு

ஆனாலும் பெங்களூர் டிம்பர் யார்டு லேவுட்டில் பாதி எரிந்த நிலையில் இருந்த பேருந்து ஒன்றை வன்முறை கும்பல் மீண்டும் நேற்று தீ வைத்து முழுமை யாக எரித்தது. அதே போல் தமிழக பதிவெண் லாரிகளும் நேற்றும் தீ வைத்து எரிக்கப் பட்டன.

தொடரும் வன்முறை

துணை ராணுவப் படையின் பாதுகாப்பை மீறி தொடர்ந்து கன்னட அமைப்புகள் வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றன.
Tags:
Privacy and cookie settings