ஐதராபாத்தி லிருந்து பெங்களூருக்கு ஒரு பெண் குழந்தையுடன் தம்பதிகள் காரில் சென்றனர். சாமஷாபாத் அருகே உணவு சாப்பிட காரை நிறுத்தி யுள்ளனர்.
அப்போது, உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தையை காரிலேயே வைத்து பூட்டி விட்டு இருவரும் அருகில் உள்ள உணவ கத்திற்கு சென்றுள்ளனர்.
திடீரென குழந்தை எழுந்து காரில் யாரும் இல்லாததை கண்டு கத்தி கதறி அழுதுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காரை சுற்றி கூடியுள்ளனர்.
இதனையடுத்து, போலீசார் உதவியுடன் ஒருவர் நெம்புகோல் வைத்து காரின் கதவை திறந்து குழந்தையை மீட்க முயன்றுள்ளார். மீட்பு பணி நடந்துக் கொண்டிருந்த போது பெற்றோர் உணவருந்தி விட்டு திரும்பி யுள்ளனர்.
பெற்றோரை கண்ட மக்கள் அவர்களை கடுமையாக வசை பாடி யுள்ளனர். ஆனால், உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை எழுப்ப வேண்டாம்
என கருதியே இவ்வாறு செய்ததாக பெற்றோர் விளக்க மளித் துள்ளனர். இச்சம்பவத் தினால் அப்பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
என கருதியே இவ்வாறு செய்ததாக பெற்றோர் விளக்க மளித் துள்ளனர். இச்சம்பவத் தினால் அப்பகுதியில் சிறது நேரம் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.