சிரியாவில் பிணைக் கைதிகள் கழுத்தை அறுத்து தொங்க விடும் கொடூர வீடியோவை ஐ.எஸ். பயங்கர வாதிகள் வெளியிட்டு உள்ளனர்.
சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்த ஐ.எஸ். பயங்கர வாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.
அவர்களு க்கு எதிராக அமெரிக்கா தலைமை யில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே பயங்கர வாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியாட்டம் ஆடி வருகின்றனர்.
பிணைக் கைதிகளை தலையை துண்டித்து கொலை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியிட்டு ஐ.எஸ் பயங்கர வாதிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகி ன்றனர்.
தற்போது வேறு விதமாக கொலை செய்யும் ஒரு கொடூர மான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், ஆரஞ்சு நிற உடை அணிவிக்கப் பட்ட பிணைக் கைதிகள் கைகள் பின்புறம் கட்டப் பட்டுள்ளது.
அவர்களை முழங்கா லிட்ட நிலையில் உட்கார வைத்து பின்புறம் நிற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆடு, மாடு மற்றும்
மிருகங்களை அறுப்பது போன்று பிணைக் கைதிகளின் கழுத்தை ஈவு இரக்கமின்றி அறுக்கின்றனர். ரத்தம் பீறிட்ட நிலையில் அவர்கள் மடிந்து சாய்கின் றனர்.
அத்துடன் நிற்காமல் அவர்களின் உடலை இறைச்சிக் கடையில் ஆடு, மாடுகளை தொங்க விடுவது போன்று கொலை செய்யப் பட்டவர் களையும் தொங்க விடுகின்றனர். இக்காட்சிகள் 12 நிமிடங்கள் ஓடுகிறது.
இக்கொலைக் கள் வடகிழக்கு சிரியாவில் டெரஸ் - ஷார்நகரில் ஆடு, மாடுகளை வெட்டும் கொலை களத்தில் வைத்து நடத்தப் பட்டுள்ளது.
இவர்கள் அமெரிக்கா வுக்கு உளவு பார்த்தவர் கள் என குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகை களுள் ஒன்றான பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப் பட்டது. அப்போது பயங்கர வாதிகள் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர்.