ஹைதராபாத்தில் சமூக வலை தளத்தால் விபரீதம் கணவன் கைது !

ஹைதராபா த்தில் மனைவியை துண்டு துண்டாக வெட்டி எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர். 
ஹைதராபாத்தில் சமூக வலை தளத்தால் விபரீதம் கணவன் கைது !
ஹைதரா பாத் கல்ஜிபாலி பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப் பில் வசித்து வருபவர் ரூபேஷ் அகர்வால். 

இவர் தென் ஆப்பிரிக் காவை சேர்ந்த நடன அழகி சிந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு சானியா (8) என்ற பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வருடன் சிந்தியாவு க்கு அண்மை யில் பழக்கம் ஏற்பட்டது. 

நாளடை வில் இருவருக்கும் இடையே இது காதலாக மாறியது. இதன் காரணமாக கணவர் ரூபேஷை விட்டு பிரிய முடிவெடுத்த சிந்தியா மகள் சானியாவுடன் பிரான்ஸ் செல்வதற்கு திட்ட மிட்டதாக கூறப் படுகிறது.

இதனால் ஆத்திரமடை ந்த ரூபேஷ் சிந்தியாவை கண்டித் துள்ளார். எனினும் தனது முடிவில் இருந்து சிந்தியா பின் வாங்க வில்லை. 

இதன் காரண மாக கடந்த ஞாயிற்றுக் கிழமை இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட் டுள்ளது.
அப்போது தன்நிலை மறந்த ரூபேஷ் ஆத்திரத்தில் மனைவி சிந்தியா வின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். 

பின்னர் உடலை துண்டாக துண்டாக வெட்டி, ஒரு சூட்கேஸில் வைத்து குழந்தை யையும் அழைத்துக் கொண்டு காரில் ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதிக்கு சென்று ள்ளார். 

மதனபல்லி என்ற இடம் வந்ததும் மனைவி யின் உடலை தீயிட்டு கொளுத் தினார். பின்னர் அங்கிருந்து அவர் வீட்டுக்கு புறப்பட்ட போது கார் சேற்றில் சிக்கிக் கொண்டது. 

அப்போது அப்பகுதியி ல் இருந்த உள்ளூர் மக்கள் சிலர் காரை சேற்றில் இருந்து அப்புறப் படுத்த உதவ முன் வந்த போது, உடல் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக ரூபேஷையும் மடக்கி பிடித்து போலீஸாரி டம் ஒப்படை த்தனர். 
இதைத் தொடர்ந்து நடத்தப் பட்ட விசார ணையின் போது, முதலில் பங்கு சந்தை பிரச்சினை யால் இந்த கொலை செய்ததாக தெரிவித்த ரூபேஷ் 

பின்னர் வேறொரு வரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத் ததால் தான் சிந்தியாவை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். 

மேலும் மகளை பிரிய மனம் இல்லாத தால் மனைவியை கொல்ல துணிந்த தாகவும் தெரிவி த்தார். 

இந்த கொடூர கொலை தொடர்பாக சம்ஷாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:
Privacy and cookie settings