மகன் மீது கொண்ட மோகத்தால் கணவரை தீர்த்துக் கட்ட முயன்ற மனைவி !

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரை சேர்ந்த ராபர்ட் பெசி என்பவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் அமி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
மகன் மீது கொண்ட மோகத்தால் கணவரை தீர்த்துக் கட்ட முயன்ற மனைவி !

இந்த திருமணத்தின் போது ராபர்ட்டுக்கு இரண்டு பிள்ளைகளும், அமிக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளை களும் இருந்தன.


அப்போது 4 வயது சிறுவனாக இருந்த அமியின் மகன் மைக்கேல் என்பவனை ராபர்ட் தனது தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டார்.

இந்த தம்பதி யருக்கும் மேலும் 2 பிள்ளைகள் பிறந்தன. பருவ வயதை யடைந்த மைக்கேலுடன் அமி தனிமையில் மிகவும் நெருக்கமாக இருப்பதாக அறியவந்த ராபர்ட், மனைவியை அடிக்கடி கண்டித்தார்.

ஆனால், தாய்- மகன் என்ற பந்தத்தை மீறிய விரசமான இந்த நெருக்கத்தை சில சந்தர்ப் பங்களில் கண்கூடாகவே பார்த்து விட்ட ராபர்ட், அமியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

இதை அறிந்து கொண்ட அமி, அவர் தன்னை விவாகரத்து செய்வதற்கு முன்னதாக நாம் அவரது கதையை முடித்து விட வேண்டும். 

அவரது இன்சூரன்ஸ் பணத்தை வைத்துக் கொண்டு வசதியாக வாழ வேண்டும் என்று திட்டமிட்டார்.

இதற்கு தோதான ஒரு கொலை யாளியை தேடிக் கொண்டிருந்த போது, பல கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அமியின் சகோதரரான ரிச்சர்ட் பியர்சன் என்பவர் விடுதலை யாகி வெளியே வந்தார்.


அவரையும் தனது அன்புக்குரிய மகன் மைக்கேலையும் தனிமையில் அழைத்துப் பேசி ராபர்ட்டை தீர்த்து கட்ட தேதி குறித்து தந்தார்.

சம்பவத்தன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ராபர்ட் தனது காரில் வேலைக்கு சென்று கொண் டிருந்தார். அப்போது, அவரது காரை மற்றொரு கார் பின் தொடர்ந்து வருவதை கவனித்தார்.

அந்த கார் அமியின் சகோதரரான ரிச்சர்ட்டின் காதலிக்கு சொந்தமானது என்பதை அவர் யூகித்து முடிப்பதற்குள் அந்த காரில் இருந்து பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு, ராபர்ட்டின் கார் கண்ணாடியை துளைத்துக் கொண்டு அவரது கழுத்தை பதம் பார்த்தது.

இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் சுய நினைவை இழந்தார். யார் மூலமாகவோ தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார் அவரை ஆஸ்பத் திரியில் சேர்த்தனர்.


ஆபத்தான ஆபரேஷனை எதிர்கொண்ட அவர் உடல்நலம் தேறியவுடன் அந்த சம்பவத்தை சிந்தித்துப் பார்த்தார். 

கொலை செய்வதில் வல்லவனான அமியின் சகோதரர் ரிச்சர்ட் தன்னை கொல்ல முயன்றதாக போலீசில் அவர் புகார் அளித்தார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ராபர்ட்டின் காரை பின்தொடர்ந்து வந்த காருக்குள் ரிச்சர்டும், மைக்கேலும் அமர்ந்தி ருக்கும் காட்சியும்,

வளர்ப்பு தந்தை என்றும் பாராமல் ராபர்ட்டை மைக்கேல் துப்பாக்கியால் சுடும் காட்சியும் பதிவாகி யிருந்தன. இதனையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர்.


சிறைக்குள் தன்னுடன் நெருக்கமாக பழகிவந்த ஒருவரிடம் ஒரு நாள் மைக்கேல் சில உண்மைகளை உளறிக் கொட்ட, அவனது தாயார் அமியும் கைது செய்யப் பட்டார்.

இவர்கள் மீது நடைபெற்றுவந்த வழக்கில் சுமார் 17 லட்சம் ரூபாய் பணத்துக்காக கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற அமிக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings