சீனாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய், இந்தியாவில் தனது உற்பத்தியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதுபோல சீனாவிலி ருந்து இந்தியா வுக்கு நிறுவனங் கள் தங்களது ஆலை யை மாற்று வதால் வேலை வாய்ப்பு பறி போகும் என சீன அரசு கவலை அடைந் துள்ளது.
வளரும் பொருளாதார நாடுகளில் முதலிடத்தில் சீனாவும், அடுத்ததாக இந்தியாவும் உள்ளன.
இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு தங்களது உற்பத்தி ஆலைகளை மாற்றுவது அங்குள்ள வர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கும் என்பதால்
சீன அரசு இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக கவனிக்கிறது என்று சீனாவிலிருந்து வெளியாகும் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலையை இந்தியாவுக்கு இடமாற்றம் செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன.
இதனால் இரு நாடுகளிடையிலான பொருளாதார போட்டி புதிய வடிவம் எடுத்துள்ளது என அந்த பத்திரிகை தெரிவிக்கிறது.
ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹுவாய் நிறுவனம் இந்தியாவுக்கு தனது உற்பத்தி ஆலையை மாற்றுவதால், ஸ்மார்ட் போன் உற்பத்தியில் வேலை வாய்ப்பு குறையும் என குறிப்பிட்டுள்ளது.
சமீபகால மாக ஸ்மார்ட் போன் உற்பத்தியில் எண்ணிலடங்கா சீன நிறுவன ங்கள் ஈடுபட்டு ள்ளன. இத்தகைய நிறுவன ங்கள் தங் களது உற்பத்தி ஆலையை மாற்றும் போது இவற்று க்கு சப்ளை செய்யும் வெண்டா ர்களும் தங்களது உற்பத்தி இடத்தை மாற்றுவர்.
ஆனால் இது வரையில் இவ்விதம் மாறுவதால் எந்த அளவுக்கு வேலையிழப்பு இருக்கும் என்று மதிப்பிடப்பட வில்லை.
இந்தியாவுக்கு மாறுவதால் எவ்வளவு சீனர்கள் வேலையிழப்பர் என்ற தகவல் திரட்டப்பட வில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
வெளிப்படையாகக் கூற வேண்டுமாயின், சீனா இவ்வித வேலை யிழப்பை தாங்கும் நிலையில் இல்லை.
ஸ்மார்ட்போன் உற்பத்தியா ளர்களுக்கு உரிய தளத்தை இந்தியா உருவாக்கித் தரும் போது அதற்குரிய போட்டியை எதிர் கொண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்களை தக்க வைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சீனா உள்ளது.
இதற்கு அங்குள்ள உற்பத்தியாளர்கள் தொடர்ந்து புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ள்ளது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் ஸ்திரமான அரசியல் சூழல் நிலவுகிறது. அத்துடன் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகளும் தென்படு கின்றன.
மக்கள் தொகை அதிகமாக இருப்பது, மிகக் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் அதிகம் கிடைப்பதால் சர்வதேச முதலீட்டாளர்கள் இந்தியாவுக்கு செல்வதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு சீனாவின் நேரடி முதலீடு 87 கோடி டாலராகும். இது 2014-ம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட முதலீட்டைக் காட்டிலும் 6 மடங்கு அதிகமாகும்.
இருப்பினும் சீனா முதலீடு செய்யும் 100 கோடி டாலருக்கும் அதிகமான முதலீடுகளைப் பெறும் 13 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற வில்லை.
இந்தியாவில் சீன நிறுவனங்கள் செய்த நேரடி முதலீட்டில் இது 2.2 சதவீதமாகும்.
அதாவது மொத்தமாக இந்தியாவுக்கு வந்த நேரடி அந்நிய முதலீடு 3,930 கோடி டாலராகும். இருப்பினும் சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளன.
இந்தியாவில் முதலீடு செய்வதில் உள்ள பொருளாதார இடர்கள் குறித்து மதிப்பீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அந்த செய்தியில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.