முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சித்தராமையா மீண்டும் கடிதம் | Jayalalithaa's letter to the First Minister Siddaramaiah Back !

தமிழகத் தில் இன்று (வெள்ளிக் கிழமை) முழு அடைப்பு அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா மீண்டும் கடிதம் எழுதி யுள்ளார்.
அந்த கடிதத்தில், அசம்பாவித சம்பவங் கள் நடை பெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டுக் கொண்டு ள்ளார்.

சித்தராமையா மீண்டும் கடிதம்

காவிரி பிரச்சினை யில் தமிழகத்தில் வசிக்கும் கன்னடர்க ளுக்கு பாதுகாப்பு வழங்கு மாறு கோரி முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா கடந்த 12–ந்தேதி கடிதம் எழுதி இருந்தார். 

அதற்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களு க்கு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சித்தராமையா வுக்கு அன்றைய தினமே கடிதம் எழுதினார்.

தமிழகத் தில் இன்று (வெள்ளிக் கிழமை) முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டு அதற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன. 

இந்த சூழ்நிலை யில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மீண்டும் ஒரு கடிதம் எழுதியு ள்ளார். அதில் கூறி இருப்ப தாவது:–

வன்முறை சம்பவங்கள் நடந்து விட்டன

நீங்கள் கடந்த 12–ந்தேதி எழுதிய கடிதம் எனக்கு கிடைத்தது. கர்நாடகத் தில் வசிக்கும் குடிமக்கள் அனைவ ரின் வாழ்க்கை க்கும், அவர்களின் சொத்துகளு க்கும் மதம், மொழி வேறுபாடு இன்றி பாதுகாப்பு வழங்க மாநில அரசு உறுதி பூண்டுள் ளது என்று உறுதி அளிக்கி றேன். 

நான் கடந்த 12–ந்தேதி உங்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத் தில் கன்னட மொழி பேசும் மக்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் கர்நாடக த்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்பதை குறிப்பிட்டு இருந்தேன்.

நாங்கள் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக் கைகள் எடுத்து இருந்தும் கூட, துரதிர்ஷ்ட வசமாக அன்றைய தினம் (12–ந்தேதி) பெங்களூரு வில் வன்முறை சம்பவங்கள் நடந்து விட்டன. இருந்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

வன்முறை யில் ஈடுபட்ட வர்கள் மீது அதிக எண்ணிக்கை யில் வழக்குகளை போட்டுள் ளோம். இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் மீண்டும் நடை பெறாதவாறு நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளு க்கு உத்தர விட்டுள்ளேன்.

வெறுப்பு உணர்வு ஏற்படாமல் இருக்க...

காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை கோர்ட்டிலும், காவிரி மேற் பார்வை குழுவிலும் உள்ளது. இந்த சூழ்நிலையில் முழு அடைப்புகள் மற்றும் போராட்ட ங்கள் நடத்துவ தின் மூலம் எந்த பயனும் கிடைக்காது.

தமிழ்நாட்டில் சில அமைப்புகள் நாளை (இன்று) முழு அடைப்பு க்கு அழைப்பு விடுத்து இருப்பது என்னை மிகுந்த கவலை யில் ஆழ்த்தி யுள்ளது.

இந்த முழு அடைப்பால் இரு மாநிலங்கள் இடையே எந்த வெறுப்பு உணர்வும் ஏற்படாமல் இருக்க தேவை யான நடவடிக் கையை நீங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நாளை (இன்று) பெயரளவுக்கு விடுக்கப் பட்டுள்ள முழு அடைப்பின் போது 

எந்த விரும்பத் தகாத அசம்பா விதமான சம்பவங்கள் நடைபெறா மல் தடுக்க உரிய நடவடிக்கை களை எடுக்கு மாறும், தமிழகத் தில் வசிக்கும் கன்னட மொழி பேசும் மக்கள் மற்றும் அவர்களின் சொத்துகளு க்கு உரிய பாதுகா ப்பை உறுதி செய்யு மாறும் கேட்டுக் கொள்கிறேன்.

ஊடகங்களுக்கு அறிவுறுத்துமாறு...

காவிரி போராட்டங் கள் தொடர்பான செய்திகளை பொறுப்புடன் வெளியிடு மாறு ஊடகங்க ளுக்கு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம். அதே போல் நீங்களும் தமிழகத்தில் ஊடகங்களுக்கு அறிவுறுத்து மாறு வேண்டு கிறேன்.

தமிழக அதிகாரிக ளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் படி எங்கள் மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரு க்கு உத்தர விட்டு ள்ளேன். 

அதேபோல் நீங்களும் உங்கள் அதிகாரிகளு க்கு எங்கள் அதிகாரிக ளுடன் தொடர்பில் இருக்கும் படி அறிவுறுத் துமாறு கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings