தமிழகம் முழுவதும் ராம்குமார் மரணச் செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் சத்தம் போடாமல் காவிரியில் தண்ணீர் திறப்பதை நிறுத்தி விட்டது கர்நாடகா.
நீர் மட்டம் குறைந்து விட்டதால் இனியும் நீர் திறக்க முடியாது என்று கர்நாடக தரப்பில் காரணம் தெரிவிக்கப் பட்டுள்ளது. காவிரியில் தமிழகத் திற்கு உரிய நீரை உரிய காலத்தில் கர்நாடகா திறக்க வில்லை.
இதை யடுத்து உச்ச நீதி மன்றத்தை நாடியது தமிழக அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் முதலில் 10 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தர விட்டது.
இதை யடுத்து கர்நாடகத் தில் போராட்டம் வெடித்தது. இயல்பு வாழ்க்கை ஸ்தம்பி த்தது. இருப்பினும் வேறு வழியில் லாமல் கர்நாடகு அரசு தண்ணீர் திறந்து விட்டது. இருப்பினும் உச்ச நீதி மன்றம் கூறிய அளவில் தண்ணீர் திறக்கப் படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணை க்கு வந்த போது முந்தைய உத்தரவை மாற்ற வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கை யை உச்சநீதி மன்றம் நிராகரி த்தது.
மேலும் 20ம் தேதி வரை தினசரி விநாடிக்கு 12,000 கன அடி நீரை திறந்து விடுமாறு நீதிமன்றம் உத்தர விட்டது.
இதை யடுத்து பெங்களூரில் மிகப் பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்க ளின் வாகனங்கள் குறி வைத்துத் தாக்கப் பட்டன.
இதற்கிடையே, இன்று மாலை திடீரென கே.ஆர்.எஸ் அணையி லிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி விட்டது கர்நாடக அரசு. தமிழகத் தின் ஒட்டு மொத்த கவனமும்
தற்போது ராம்குமார் விவகார த்தில் திரும்பி யுள்ள நிலையில் கர்நாடகம் தண்ணீர் திறப்பை நிறுத்தி யுள்ளது. போதிய அளவில் நீர்மட்டம் இல்லை என்று இதற்குக் காரணம் கூறப்பட் டுள்ளது.