கோட்டூர் அருகே எண்ணெய் கிணறு தோண்டும் பணி.. முற்றுகை போராட்டம் !

கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறு தோண்டும் பணியை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கோட்டூர் அருகே எண்ணெய் கிணறு தோண்டும் பணி.. முற்றுகை போராட்டம் !
எண்ணெய் கிணறு தோண்டும் பணி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலப்பனையூர் ஊராட்சி கமலாபுரம் உக்கடை கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் அமைக்கப்படும் எண்ணெய் கிணறு தோண்டும் 

பணியினால் சுற்றுப் புறங்களில் குடிநீர், விவசாய பம்புசெட் மற்றும் சுற்று சூழல் பாதிக்கப் படுகின்றன. 

இதையடுத்து ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறு தோண்டும் பணியினை மத்திய, மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த கோரி
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கிராம பொது நலக்கமிட்டி சார்பில் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது. 

போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செங்குட்டுவன், 

ஜீவானந்தம், பொதுநலக் கமிட்டி தலைவர் தனராஜ், செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

கிளை செயலாளர்கள் அம்பிகாபதி, சிவக்குமார், பொது நலக்கமிட்டி பொறுப்பாளர்கள் சக்திவேல், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, துணைச் செயலாளர் செந்தில் நாதன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராமன், 

ஊராட்சி தலைவர் மணிமேகலை முருகேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
Tags:
Privacy and cookie settings