உயிர் நீத்த விக்னேசிற்கு ஈழத்தில் இருந்து ஒரு மடல் !

தம்பி விக்னேஸ் நீ போய் விட்டாயாம்
உயிர் நீத்த விக்னேசிற்கு ஈழத்தில் இருந்து ஒரு மடல் !
நீதான் நெருப்பு

அதை அறிவிக்க வேறு பல வழிகள் இருந்தன

நீ இறந்து போனது முட்டாள் தனம்

நீ என் தம்பி என்பதற்காக

உன் முடிவை ஆமோதிக்க முடியாது

நீ நெருப்பு

நீ இருந்தி ருக்க வேண்டி யவன்

இறந்தி ருக்க வேண்டிய வன் அல்ல

நீ கட்சியின் தொண்டன் அல்ல

நீ தமிழர்க ளின் தொண்டன்

நீ இருந் திருக்க வேண்டி யவன்

நீ உண்மை யானவன்

நீ இறந்திருக்க வேண்டி யவன் அல்ல

பால் வடியும் உன் முகத்திற்கு

நான் தலை சாய்க்கி ன்றேன் வணங்குகி ன்றேன்

நீ போயிரு க்கக் கூடாது

உனக்கென இன்னும் கடமைகள் இருந்தது

நீ பொறுமை காத்திருக்க வேண்டும்

நான் காவிரிக் காக இரங்க வில்லை

அது சித்து விளையாட்டு

உனக்காக கலங்குகி ன்றேன்

அடுத்த சூப்பர் ஸ்ரார் யாரென்று

வாக்கெடுப்பு நடத்துகின்ற இளைஞர் கள் மத்தியில்

உன்னுயிர் எத்தனை மாபெரிது தெரியுமா

சானல்களுக்கும்

அங்கு தெரிகிற சதைகளின் இடை வெளிகளுக் குள்ளும்

சதா தொலை கின்ற இன்றைய

இளைய தலைமுறைகள் மத்தியில்

நீ மாபெரும் கோபுரம் என்பதை ஏன் அறிந்தி ருக்காது விட்டாய்

நீ உன் இறுதி வார்த்தை களை

கடித வடிவில் எழுதிக் கொண்டிருந்த

அந்தக் கணத்திலும்

நீ தீயில் கருகிக் கொண்டிருந்த

அந்தக்கணத்திலும்

நீ உயிருக்காக போராடிக் கொண்டிருந்த

அந்தக்கண த்திலும்

உன் கடைசி மூச்சு காற்றில்

அந்தக்கண த்திலும்

தமிழ் நாட்டிலும் புலம் பெயர் நாட்டிலும்

ஏன் நீ நேசித்த ஈழத்திலும் கூட

தொலைக் காட்சித் தொடர்களை யும்

நட்சத்திர களியாட்டங் களையும்

ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிரு ந்தது

அந்த கூட்டத் தின் பெயரும் தமிழர்கள் தான்

அறிவாயா தம்பி

இன்றில்லை எனில் நாளை நாம் வெல்வோம்

அதற்காய் நீ வேண்டும்

யாருக்காகவோ

உனது பெருமை மிக்க உயிரை

நாம் தொலைத்து விட்டோம் என்றே எண்ணுகி ன்றோம்.

அன்னியனை அடக்கு வதும் வெல்வதும் வெகு சுலபம்

அதற்கு நல்ல தலைமை வேண்டும்

எத்தனை பேர் தமிழர்க ளுக்கு தலைமை தாங்குகி றார்கள்

நீ எண்ணிப் பார்த்திருந் தால்

உன் உயிர் வீணாகவே போகும் என்பதை உணர்ந்தி ருப்பாய் தம்பி

ஏன் நீ கூட உலகத் தமிழர்க ளின்

தன்னிகர ற்ற தலைவனாய் இருந்திரு க்கலாம்

நான் நினைக் கிறேன்

தன்னி கரற்ற எங்கள் நாளைய தலைவன்

பிரிந்து விட்டான் என்றே!

பொன்.காந்தன்
Tags:
Privacy and cookie settings