காற்றழுத்த தாழ்வு நிலை... தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக் கிறது. 
காற்றழுத்த தாழ்வு நிலை... தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறிய தாவது: 

மேற்கு வங்க கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டில் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. நேற்று இரவு சென்னை நுங்கம்பாக் கத்தில் 43.3 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகம், புதுச் சேரியில் கனமழை பெய்யும். 

சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்து டன் காணப்படும். இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:
Privacy and cookie settings