வளைகுடா நாடுகளுக்கு 1,500 பெண்களை சட்டவி ரோதமாக அனுப்பியவன் மற்றும் அவனுடைய பெண் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
நேபாளத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்கள், டெல்லி குற்றப்பிரிவு போலீசில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில், வளைகுடா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக, தங்களை கூட்டி வந்த கும்பல், டெல்லியில் ஓரிடத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக கூறி இருந்தனர்.
அதன் பேரில், போலீசார் மகிபால்பூர் என்ற அந்த இடத்தில் சோதனை நடத்திய போது, அங்கு 26 இளம் பெண்கள் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். அவர்களை போலீசார் மீட்டனர்.
அந்த பெண்களை அடைத்து வைத்திருந்த வித்யா லாமா என்ற பெண்ணை கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில், இந்த ஆள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஷபின் ஷா என்பவன் கைது செய்யப் பட்டான்.
விசாரணையில், அவன் இந்தியாவின் வட மாநிலங்கள், நேபாளம் ஆகியவற்றில் இருந்து பெண்களை ஆசை காட்டி அழைத்து வந்து, டெல்லியில் அடைத்து வைத்து,
சட்ட விரோதமாக வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வந்ததாக தெரிவித்தான். 2011–ம் ஆண்டில் இருந்து இது வரை 1,500 பெண்களை அனுப்பி இருப்பதாக கூறினான்.
சர்வதேச அளவில் தன்னிடம் ஏஜெண்டுகள் பணியாற்றி வருவதாகவும் அவன் தெரிவித்தான்.