மோடிக்கு மிரட்டல் விடுத்த பாக்.சிறுமி !

பாகிஸ்தான் சிறுமி ஒருவர் பிரதமர் மோடிக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கி யால் மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
மோடிக்கு மிரட்டல் விடுத்த பாக்.சிறுமி !
காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாமில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியா னார்கள். இதன் பின்னணியில் பாகிஸ் தான் தீவிரவா திகள் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

அதற்கான ஆதாரத்தை அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து வழங்கியது இந்தியா. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவில் சிக்கல் ஏற்படும் சூழல் எழுந்து ள்ளது.

பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி கடுமை யாக பேசினார். 

அதோபோல் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய வெளியு றவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தா னுக்கு பதிலடி தரும் விதமாக பேசியு ள்ளார்.

இந்நிலை யில், பாகிஸ் தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஏ.கே 47 ரக துப்பாக்கியை எவ்வாறு சுடுவது என தனது மகளுக்கு கற்றுகொடுக்கும் வீடியோ வெளியாகி யுள்ளது. 
அதில் பிரதமர் மோடியை எச்சரிக் குமாறு சொல்லிக் கொடுக்கும் காட்சியை வீடியோ எடுத்து, அதனை சமூக வலை தளங்களில் வெளியிட் டுள்ளனர்.

அந்த வீடியோ வில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் சிறுமி கேமராவை நோக்கி பிரதமர் மோடிக்கு மழலை மொழியில் மிரட்டல் விடுத் துள்ளார்.

மகளுக்கு தந்தையே துப்பாக்கி பயிற்சி கொடுக்கும் காட்சி உலகம் முழுவதிலும் வெளியாகி அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமியின் கையில் பேனாவை கொடுங்கள், துப்பாக்கியை அல்ல என்றும் சிலர் காட்ட மாக தெரிவி த்துள்ளனர். 
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் எல்லை யில் பதற்ற மான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலை யில் தந்தையே சிறுமிக்கு இவ்வாறு பயிற்சி அளிப்பது கண்டனத்து க்குரியது என பலரும் தெரிவித் துள்ளனர்
Tags:
Privacy and cookie settings