காவிரி பிரச்சினை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மகளிர் காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளரும் நடிகையுமான நக்மா தெரிவித்துள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங் கேற்பதற்காக கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வருகை தந்த நக்மா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
பல மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. பருப்பு, எண்ணெய் வகைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த நரேந்திர மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவிரியி லிருந்து தமிழகத்து தர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகம் மறுப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். காவிரி பிரச்சினை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
எனவே, அது பற்றி எதுவும் கூற விரும்ப வில்லை. மழை, வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப் பட்டபோது ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.
கர்நாடக காங்கிரஸ் அரசும் தமிழகத்துக்கு உதவி செய்தது. எனவே, காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு எதிராக காங்கிரஸ் நடந்து கொள்ளாது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாததற்கான காரணங்களை கர்நாடக அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
இளம் பெண்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களில் பெண்கள் ஆபாசமாக மிரட்டப் படுகின்றனர்.
மகளிர் காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் ஹசீனா சையத்துக்கு சமூக ஊடகங்களில் ஆபாசமாக மிரட்டல் விடுத்தவர்கள் மீது காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸுக்கு விரை வில் தலைவர் நியமிக்கப்படுவார்.
பெண் ஒருவர் மாநிலத் தலைவராக நியமிக்கப் பட்டால் தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சி அடைவேன். காங்கிரஸ் ஜனநாயக வழியில் செயல்படும் கட்சி.
அனைவரது கருத்துக் களுக்கும் மதிப்பளித்து முடிவெடுக்கும் கட்சி. எனவேதான், மாநிலத் தலைவர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் சரியான முடிவை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எடுப்பார்கள்.
இவ்வாறு நக்மா கூறினார். தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.