கைது செய்து மிரட்ட லாம் என்பதெல் லாம் தம்மிடம் நடக்காது என்று அதிமுக வில் இருந்து டிஸ்மிஸ் செய்யப் பட்ட சசிகலா புஷ்பா சவால் விட்டுள்ளார். நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித் துள்ள பேட்டி:
கேள்வி:
உங்களின் முன் ஜாமீன் மனு ரத்தாகி யிருக்கும் சூழலில், உங்களை கைது செய்வ தற்கான நடவடிக்கை களை ஜெயலலிதா அரசு எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. 'கைது செய்யப் படுவோம்' என்கிற அச்சம் உங்களுக்கு இருக்கிறதா?
பதில்:
தவறு செய்பவர் களே சுதந்திரமாக, அதிகார தொனியில் நடமாடும் போது எந்தத் தவறும் செய்யாத நான் எதுக்கு பயப் படணும்?
நம்முடைய ஜுடிசியல் சிஸ்டமும் டெமாக்ரசியும் வலிமையாக இருக்கும் போது, தனிப் பட்ட ஒரு முதலமைச் சருக்கோ (ஜெயலலிதா) அரசாங்கத் துக்கோ பயப்படவேண்டிய அவசியம் கிடையாது.
என்கிட்ட நடக்காது
அவகாசம் முடிந்தா லும் மீண்டும் உச்ச நீதி மன்றம் சென்று என் தரப்பு நியாய த்தைச் சொல்லி ஜாமீன் பெறுவேன். கைது செய்து மிரட்டுவ தெல்லாம் என்கிட்டே நடக்காது.
பாவம் மிரட்டப் பட்டிருக்கி றார்கள்...
கேள்வி:
உங்களிடம் பணிபுரிந்த 2 பெண்கள் உங்களு க்கும் உங்கள் குடும்பத்தினருக் கும் எதிராக சுமத்தி யிருக்கும் பாலியல் குற்றச் சாட்டுகள் அதிர வைக் கிறதே?
பதில்:
புகார் கொடுக்க வந்த அந்த பெண்களை கவனியு ங்கள். எந்தளவு க்கு அவர்கள் மிரட்டப் பட்டுள்ளனர் என்பது அவர்களின் முகமே காட்டிக் கொடுக் கிறது.
அப்பாவிப் பெண்களை எனக்கு எதிராக மிரட்டி, பயமுறுத்தி புகார் சொல்ல வைப்பது தான் ஒரு முதல்வரின் வேலையா?
மிரட்டியவர்கள் மீதுதான் வழக்கு போடனும்
இப்படி மிரட்டி புகார் சொல்ல வைப்பவ ர்கள் மீது ஒரு வழக்குப் போடணும். அப்போது தான் அதிகாரத் திலிருப் பவர்கள் திருந்து வார்கள்; அப்பாவிப் பெண்களும் காப்பாற்றப் படுவார்கள்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.