50 பஸ்கள், 90 லாரிகள் தீ வைத்து எரிப்பு, இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூடு, தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் சூறை, கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வருகை.
காவிரியில் இருந்து தமிழகத் துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டதால் கர்நாடக மாநிலத்தில் பயங்கர வன்முறை நடந்து வருகிறது.
தமிழக பதிவு எண் கொண்ட 50 பஸ்கள், 90 லாரிகள் தீவைத்து கொளுத்தப் பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன.
தமிழர்களின் கடைகள் சூறையா டப்பட்டன. வன்முறை காரணமாக பெங்களூர், மைசூர், மாண்டி யாவில் 144 தடை உத்தரவு போடப் பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதற்ற நிலை நீடிக்கிறது.
காவிரியி லிருந்து 50 டிஎம்சி தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அம்மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், உடனடியாக தமிழ கத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து காவிரியில் தமிழகத் துக்கு தண்ணீர் திறப்பது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
அதன்படி கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 12 ஆயிரத்து 963 மற்றும் கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. கர்நாடக அரசு,
தமிழகத் துக்கு தண்ணீர் திறந்துள் ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் உள்ளிட்ட பகுதி மட்டு மல்லாமல், டெல்டா மாவட்டங்களில் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே தமிழகத் துக்கு தண்ணீர் திறந்து விட உத்தர விட்டதை மறு பரிசீலனை செய்யக் கோரி கர்நாடக அரசின் சார்பில் கடந்த 10ம் தேதி உச்ச நீதிமன்ற த்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப் பட்டது.
அம்மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு நேற்று காலை விசார ணைக்கு வந்தது. அப்போது இரு மாநில அரசுகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் செய்தனர்.
அதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காவிரியில் இருந்து செப்டம்பர் 20ம் தேதிவரை தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.
நீதிமன்ற த்தின் உத்தரவு கர்நாட காவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கன்னட அமைப்பினர், விவசாயிகள் தீவிர போராட் டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் வேகமாக கர்நாடக மாநிலத்தின் பிற பகுதிகளு க்கும் பரவியது. இந்த போராட்ட ங்கள் முன்னாள் எம்.எல்.ஏ. வாட்டாள் நாகராஜ் தலைமையில் அனைத்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு, கர்நாடக ரக்ஷணா வேதிகே, கன்னட சேனா,
கஸ்தூரி கர்நாடக வேதிகே, கன்னட ஜனபர வேதிகே, கன்னட ஜாக்ருதி சங்கம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் போராட் டத்தில் குதித்து ள்ளனர்.
இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக வாகனங்க ளுக்கு தீ வைப்பு: கர்நாட காவில் கடந்த 5ம் தேதி ஒரு வாரமாக தமிழக வாகனங்கள் இயங்காமல் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு முதல் வாகனங்கள் ஓடத் தொடங் கியது. இதனிடை ல் நேற்று மீண்டும் போராட்டம் வெடித்தது.
இதில் பெங்களூரு வில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் விதானசவுதா முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதற்குள் போராட்டம் காட்டு தீ போல் பரவியதால், மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா தாலுகா வில் தமிழர்கள் நடத்தி வந்த கடைகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதை தொடர்ந்து மத்தூர், மளவள்ளி, ராமநகரம், சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பல பகுதியிலும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல் நடந்தது.
ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா வில் தமிழக பதிவு எண் கொண்ட 6 லாரிகள் மீது தாக்குதல் நடந்தது. சித்ரதுர்கா, துமகூரு, பெலகாவி, பல்லாரி, பாகல் கோட்டை உள்பட பல மாவட்ட ங்களிலும் தமிழக வாகனங்கள் தீ வைத்து எரித்தும், உடைத்தும் சேதப் படுத்தினர்.
பெங்களூரு -மைசூரு சாலை நாயண்ட ஹள்ளியில் உள்ள தொழில் பேட்டையில் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப் பட்டது.
சாம்ராஜ் பேட்டையில் உள்ள கோகுல்ராஜ் டிரான்ஸ் போர்ட் நிறுவன குடோனில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட லாரிகள் எரிக்கப் பட்டது.
கே.பி.என்.டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட பஸ்கள் தீ வைத்து எரிக்கப் பட்டது. அப்போது அதில் பணியா ளர்கள் இருந் தார்களா என்பது குறித்து தகவல் இல்லை.
இதனால் உயிர்பலி இருக்குமோ என்று அஞ்சப் படுகிறது. மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட லாரி, டெம்போ டிராவல்ஸ் வேன்கள் எரிக்கப் பட்டது. ஆவலஹள்ளி 10க்கும் மேற்பட்ட லாரிகள் எரிக்கப் பட்டது.
மாநகரம் முழுவதும் பதற்றம் காணப்ப டுகிறது. தமிழக முதல் வருக்கு கடிதம்: இதனி டையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதா விற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்வர் சித்தரா மையா கூறிய தாவது,
தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தி யுள்ளோம். எந்த நிலையிலும் இங்கே வசிக்கும் தமிழர் களுக்கு பாதிப்பு ஏற்படாது.
இங்கே வசிப்பர்கள் தமிழர்களாக இருந்தாலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வர்கள். அதே போல் தமிழ் நாட்டி லுள்ள கன்னடர்கள் தமிழர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப் பாகும் என்றார்.
3 மாவட்ட ங்களில் 144 தடை: கர்நாடக மாநில டி.ஜி.பி ஓம்பிரகாஷ் கூறியதாவது; தமிழகத்தில் கர்நாடக வாகனங்கள் மற்றும் ஓட்டல்கள் மீது தாக்குதல் நடத்திய செய்தி அனைத்து மீடியாக் களிலும் ஒளிப்பரப் பானது.
இதை பார்த்து ஆத்திர மடைந்த கன்னட அமைப்பினர், மாண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள், டாடா சுமோவை தீ வைத்து எரித்தனர். மேலும் சில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இது வரை 50க்கும் அதிகமான பஸ்களும் 90 லாரிகளும் மாநிலம் முழுவதும் எரிக்கப் பட்டுள்ளது. 50க்கும் அதிகமான வாகனங்கள் கல் வீசி தாக்கப் பட்டுள்ளது.
பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் படி நகர போலீஸ் கமிஷனர் களுக்கு உத்தர விட்டுள்ளேன்.
மாண்டியா, மைசூரு, ஹாசன் மாவட்ட டெல்டா பகுதிகள், பெங்களூரு நகர பகுதிகளில் முன் கூட்டியே போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் போராட்டம் முடிவுக்கு வரும் வரை பெங்களூரு உள்பட பதற்றமான 3 மாவட்டங் களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்காக சி.ஆர்.பி.எப் மற்றும், கே.எஸ்.ஆர்.பி, ஆர்.ஏ.எப், நகர போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
பெங்களூரு பன்னர கட்டா, சேட்லைட் ேபருந்து நிலையம் மற்றும் பாஷியம் சர்கிளில் உள்ள அடையார் ஆனந்த பவன் மற்றும் நகரில் உள்ள பூர்வீகா மொபைல் ஷோரூமையும் கல்வீசி தாக்கினர்.
பெங்களூருவில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். கர்நாடகா விரைந்தது ராணுவம்: முதல்வர் சித்தராமை யாவின் கோரிக்கை யை ஏற்று கர்நாட காவில் வெடித்துள்ள வன் முறையை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய அரசு 10 படைப் பிரிவுகளை
அங்கு உடனடியாக அனுப்பி வைத்தது. ரேபிட் ஆக்சன் போர்ஸ் எனப்படும் விரைவு அதிரடிப் படையைச் சேர்ந்த 1,000 வீரர்களைக் கொண்ட 10 படாலி யன்கள் நேற்று கர்நாடகா விரைந் தனர்.
இவர்கள் கலவரப் பகுதிகளில் குவிக்கப் பட்டு மாநில போலீசாருடன் இணைந்து, நிலைமை யை கட்டுக்குள் கொண்டு வர பாடுபடு வார்கள் என அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
தமிழர்கள் குடியிருப் புகளில் கூடுதல் பாதுகாப்பு
இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் என்.எஸ் மெஹரிக் கூறியதாவது; பெங்களூருவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஸ்ரீராமபுரா, பிரகாஷ்நகர், ஒக்கலிபுரம், மாகடிரோடு, ராஜாஜிநகர், புலிகேசிநகர் உள்பட பல இடங்களில் போலீசார் முன்னெச் சரிக்கை நடவடிக் கையாக குவிக்கப் பட்டுள்ளனர்.
இது தவிர ரயில், பஸ் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள், தமிழக, கர்நாடக எல்லைகளில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன், நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழர்களின் தொழிற் சாலை, கடைகள், ஓட்டல்கள், தியேட்டர்கள் ஆகியவ ற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
இதனால் பெங்களூரு நகரில் அமல்படுத்தப் பட்டுள்ள 144 தடை உத்தரவுகள் மேலும் நீட்டிக்க வாய்ப் புள்ளது என்று அவர் தெரிவித் துள்ளார்.
துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
ராஜகோபால் நகர் பகுதியில் கன்னட இளைஞர்கள் சிலர் கர்நாடக அரசு பேருந்து மற்றும் போலீஸ் வாகனம் மீது தீ வைக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டு
மூலம் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரில் 2 பேருக்கு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டது.
இதில் யோகேஷ் என்பவர் பலியானார். மேலும், சுங்கதஹட்டே பகுதியில் உள்ள தமிழகத்தை சேர்ந்த கடை ஒன்றிற்கு தீ வைத்துள்ளனர். இதனால் போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு துப்பாக்கி சூடு நடத்தினர்.
* பெங்களூரு, மைசூர், மாண்டியா, 4 அணைகள் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* பெங்களூரு முழுவதும் 15,000 போலீசார் குவிப்பு.
* 1991 டிசம்பர் 12, மற்றும் 13ல் இதே போன்று கலவரம் வெடித்தது. ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
* 1996, 2000, 2004 ஆண்டுகளிலும் இதே போல் கலவரம் வெடித்துள்ளது.
* 10 கம்பெனி மத்தியபடை வரவழைக்கப்பட்டது. ராணுவமும் வருகிறது.