பணம் அதிகம் செலவழித்தால்.. பான் கார்டு அவசியம் !

குறிப்பிட்ட அளவுக்கு மேல் இனிமேல் பணம் செலவழித்தால் பான்கார்டு எண்ணைக் காட்ட வேண்டும் என்று விரைவில் அறிவிப்பு வெளியாகும் என மத்திய நிதி யமைச்சர் அருண் ஜேட்லி கூறி யுள்ளார்.
பணம் அதிகம் செலவழித்தால்.. பான் கார்டு அவசியம் !

மக்கள் தங்களது சுய விருப்பம் போல இப்போது வங்கியில் ஏடிஎம் கார்டு மூலம் எடுக்க முடியாத நிலை உள்ளது. 

அதற்கு ஏகப்பட்ட விதிகளைக் கொண்டு வந்து மக்களை சிரமப்படுத்தி வருகிறது பாஜக அரசு.

இந்த நிலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை செல வழித்தால் பான் கார்டு எண்ணைக் காட்ட வேண்டும் என்று கொண்டு வரப் போகிறார்களாம்.

இதை அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று குறிப்பிட் டுள்ளார்.

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற் குள்ளாகப் போகிறார்கள். ஆனால் கருப்புப் பணப் புழக்கத்தை கட்டுக்குள் வைக்கவே இந்த திட்டம் என்று ஜேட்லி கூறியுள்ளார்.

ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக குறிப்பிட் டுள்ளதாவது:

பான் கார்டு காட்ட வேண்டும் குறிப்பிட்டு அளவுக்கு மேல் பணப் பரிவர்த்தை மேற் கொள்வோர் கண்டிப்பாக தங்களது பான் கார்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை விரைவில் நடைமுறைக்கு வரும்.

வரி ஏய்ப்பைத் தடுக்க வரி ஏய்ப்பு செய்வோரை துல்லியமாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் கொண்டு வருவதற்குத்

தேவையான தொழில் நுட்ப வசதிகள் வருமான வரித்துறை யினருக்கு செய்து தரப் பட்டுள்ளது.

பணப்பரிவர்த்தனை கண்காணிப்பு அதிக அளவில் பணத்தை எடுப்போர், அதிக அளவிலான பணப் பரிவர்த்தனை ஆகியவற்றை

கண்டுபிடிக்கும் பணியில் வருமான வரித் துறையினர் முன்பை விட இப்போது விழிப்புடன் செயல் படுகின்றனர்

பணத்தை வைத்து எதை வாங்கினாலும் கணக்கு காட்ட வேண்டும் முன்பு போல இப்போது பெருமளவிலான பொருள் வாங்குதல்,

பணம் செல வழித்தல் ஆகியவை கண்டு கொள்ளப் படாமல் விட மாட்டாது. பெரிய அளவில் செய்யப்படும் செலவுகள் கண்காணிக்கப் படும். அதை வருமான வரித்துறை செய்யும்.

1 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் ரூ. 1 லட்சத்திற்கு மேல் எதை வாங்கினாலும்

பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள குறியீட்டு எண்கள் குறிப்பது என்ன? #PETBOTTLE

அதற்கு பான் கார்டு எண் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாய மாக்கி பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது.

கருப்புப் பணம் இங்கேயே தான் உள்ளது கருப்புப் பணத்தைத் தேடி வெளியில் அலைய வேண்டிய தில்லை.

நமது நாட்டுக் குள்ளேயே தான் அது இருக்கிறது. அதை தடுக்க இது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது என்று அவர் கூறியுள்ளார்.
Tags:
Privacy and cookie settings