பாலியல் தொழிலாளிகளின் சொர்க்க பூமி !

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து, பாலியல் தொழிலாளி களுக்கு சொர்க்கப் பூமியாக திகழ்ந்து வருகிறது. உலகின் மிக பழமையான மக்கள் ஆட்சி முறையை கொண்ட சுவிட்சர்லாந் தில், 
பாலியல் தொழிலாளிகளின் சொர்க்க பூமி !
மக்களின் வாழ்வாதார செலவுகள் ஒவ்வொ ருவரின் புருவங் களையும் உயர்த்த வைக்கும். 

நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள் முதல் ஆடம்பர வசதிகள் வரை ஒவ்வொரு விடயத்திலும் அரசு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.
ஏனைய நாடுகளை விட பொருளாதார ரீதியாக முன்னேற்ற மடைந் துள்ளதால், வெளி நாடுகளி லிருந்து இங்கு வந்து குடியேற விரும்பு வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.

சாதாரண மக்களின் வாழ் வாதாத்திற்கு துணையாக இருப்பது மட்டு மில்லாமல், சுவிட்சர்லாந்து உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பாலியல் தொழிலாளி களுக்கு ஒரு சொர்க்க பூமியாக விளங்கிறது.

ஏனைய நாடுகளுக்கு முன்னோடியாக, 1942ஆம் ஆண்டிலேயே பாலியல் தொழிலை சட்டப் பூர்வமாக அனுமதித்து நடை முறைப்படுத்தி வருகிறது. 

1942 ஆம் ஆண்டு முதல், 16 வயது அடைந்தவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட சட்டரீதியாக எந்த தடையும் கிடையாது.

சுமார் 60 ஆண்டுகளாக இருந்த இந்த நடைமுறையால் சிறுமிகள் பெருமளவில் பாதிக்கப் படுவதாக எழுந்த புகாரை அடுத்து, 

2013 ஆம் ஆண்டு பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களின் வயதை 16 லிருந்து 18 ஆக அரசு உயர்த்தியது.
18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டால், 3 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சுவிஸில் பாலியல் தொழிலுக்கு பிரபலமான நகரங்களில் ஒன்று Ticino (டிசினோ) ஆகும்.

இங்கு பாலியல் தொழிலை மேற் பார்வையிடவும் அதில் எழும் பிரச்சனைகளை கட்டுபடுத் துவதற்கு Teseu (டெசியூ) என்ற ஒரு சிறப்பு காவல்துறை பிரிவை அரசு உருவாக் கியுள்ளது.

இந்நகரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டை சேர்ந்தவர்கள் முதலில் முறையாக இந்த சிறப்பு காவல் துறை பிரிவில் பதிவு செய்து ஒரு அடையாள அட்டையை பெற வேண்டும்.
அந்த அடையாள அட்டையில், தொழிலாளியின் சுய விபரம் மற்றும் அவருடைய உடல் ஆரோக்கியம் குறித்து மருத்துவ பரிசோதனை செய்துக் கொண்ட திகதியும் குறிக்கப் பட்டிருக்கும்.

இவ்வாறு காவல் நிலையத்தில் முறையாக பதிவு செய்து வருவதால் பாலியல் தொழிலாளிகளுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் காவல் நிலையத்தின் உதவி அடுத்த சில நிமிடங்களில் கிடைத்து விடும்.
பாலியல் தொழிலாளிகளின் சொர்க்க பூமி !
இதன் அடுத்த கட்டமாக பாலியல் தொழிலாளர் களின் தகவல்களை பொலிசார் வரி வசூலிக்கும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். 

அங்கு ஒவ்வொரு பாலியல் தொழிலா ளியின் வருமானத்தை கணக்கிட்டு அதற்கேற்ற வரியை வசூல் செய்வார்கள்.
இதில் பாலியல் தொழிலாளர் களுக்கு உள்ள சிறப்பம்சம் என்ன வென்றால், அவர்கள் கட்டும் வரியில் பல சலுகைகள் உள்ளது.

குறிப்பாக, பாலியல் தொழிலாளி தனது வாடிக்கை யாளருக்கு செய்யும் தொலைப்பேசி கட்டணம், வாடிக்கை யாளர்களின் இடத்திற்கு செல்லும் பயண செலவுகள்,

தங்களது அழகை பராமரிக்கும் மேக்-அப் செலவுகள், மருத்துவ செலவுகள், Plastic Surgery உள்ளிட்ட செலவுகள் அனைத்திற்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

அது மட்டுமில்லாமல் முறையாக அரசிற்கு வரி செலுத்தி வருவதால், அவர்கள் அந்த தொழிலை விட்டு ஓய்வு பெறும் போது ஒரு பெரிய தொகையை ஓய்வூ தியமாக அரசு வழங்குகிறது.

சுவிஸின் சட்டத்திட்டங்கள் பாலியல் தொழிலாளர் களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதால் வெளி நாட்டிலிருந்து குறிப்பாக அமெரிக்கா, 
இத்தாலி, மத்திய ஐரோப்பா, கிழக்கத்திய நாடுகளை சேர்ந்த பாலியல் தொழிலாளர் களும் படையெடுக் கின்றனர்.

குறிப்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள Ticino, Zurich, Lugano, Cadenazzo மற்றும் Bellinzona நகரங்களுக்கு பெருமளவில் வருகின்றனர்.

பாலியல் தொழிலாளி களின் எண்ணிக் கையும், வருமானமும் அதிகரித்துக் கொண்டே போவதால் சுவிட்சர் லாந்து அரசு Sex- Box என்னும் திட்டத்தை சூரிச் நகரில் தொடங்கியது.
ஒரு காரை நிறுத்தும் அளவிற்கு வரிசையாக உள்ள இந்த அறைகளில் வாடிக்கை யாளர்களின் கார்களிலேயே பாலியல் தொழிலை எந்தவித இடையூ றுகளும் இல்லாமல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாலியல் தொழிலாளிகளின் சொர்க்க பூமி !
இந்த அறைகளை வரி செலுத்தும் பாலியல் தொழிலாளிகள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப் படுவதுடன்,

அதற்கு கூடுதலாக வரியும் அரசு வசூலிக்கிறது. ஒரு காலத்தில் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை அவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங் களாக பார்க்கப் பட்டது.
ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் பாலியல் தொழிலுக் கென்று ஒரு தனி அடையாளம் கிடைப்பதுடன், அது அரசின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு பங்கீடாகவும் அமைகிறது.

இந்த அடிப் படையில் சுவிட்சர் லாந்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் சக குடிமக்களை போல் நடத்தப் படுவதுடன் அவர்கள் மூலம் 

கிடைக்கும் வருமானமும் அரசிற்கு தவிர்க்க முடியாத பங்களிப்பாக அமைந் துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
Tags:
Privacy and cookie settings