செல்போனில் ஆபாச படம் எடுத்த போலி சி.பி.ஐ. அதிகாரி !

விடுதியில் பெண்கள் குளிப்பதை செல்போனில் ஆபாச படம் எடுத்ததாக போலி சி.பி.ஐ. அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
செல்போனில் ஆபாச படம் எடுத்த போலி சி.பி.ஐ. அதிகாரி !
அவரிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் மற்றும் சிவப்பு விளக்கு பொருத்தப் பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெண்களை ஆபாச படம் எடுத்தார்

சென்னை திருவான்மியூர் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 27). இவர், வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது.

தாமோதரன், பெண்கள் தங்கும் விடுதியில் உள்ள குளியல் அறையில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு பெண்கள் விடுதி நிர்வாகி தகவல் தெரிவித்தார்.
போலி சி.பி.ஐ. அதிகாரி

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவான்மியூர் போலீசார், தாமோதரனிடம் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அவர், தான் சி.பி.ஐ.யில் சப்–இன்ஸ் பெக்டராக வேலை பார்த்து வருவதாக கூறினார். 

ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார், தாமோதரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். 

மேலும் தீவிரமாக நடத்திய விசாரணையில் தாமோதரன் போலி சி.பி.ஐ. அதிகாரி என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

போலி அடையாள அட்டைகள்
செல்போனில் ஆபாச படம் எடுத்த போலி சி.பி.ஐ. அதிகாரி !
தாமோதரனிடம் சி.பி.ஐ. சப்–இன்ஸ் பெக்டர், வக்கீல், பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என 3 போலியான அடையாள அட்டைகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த போலி அடையாள அட்டைகள், அவர் பயன்படுத்திய சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட கார், போலீஸ் சீருடைகள், செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

அவரது செல்போனில் விடுதியில் பெண்கள் குளிக்கும் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாமோதரனை போலீசார் கைது செய்து அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.

தாமோதரனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறும் போது, தாமோதரன் சி.பி.ஐ.யில் சப்–இன்ஸ் பெக்டராக இருப்பதாக 
போலியான அடையாள அட்டையை வைத்துக் கொண்டு சிவப்பு விளக்கு பொருத்தப் பட்ட காரில் வலம் வந்து உள்ளார். 

தனக்கு அரசு வேலை கிடைத்து உள்ளதாக அவரது பெற்றோரையும் ஏமாற்றி வந்து உள்ளார். 

விடுதியில் தங்கி இருந்த பெண்களை தன் வலையில் சிக்க வைக்க அவர்களை செல்போனில் ஆபாச படம் எடுத்து உள்ளாரா?, 

சி.பி.ஐ. அதிகாரியாக நடித்து தவறாக நடந்து உள்ளாரா? என்பது குறித்து அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
Tags:
Privacy and cookie settings