கும்பகோணம் அருகே கதவை உடைத்து பொருட்கள் திருட்டு !

1 minute read
கும்பகோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பூஜை பொருட் களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே கதவை உடைத்து பொருட்கள் திருட்டு !
வெள்ளி பொருட்கள் திருட்டு

கும்பகோணம் நீலத்த நல்லூர் மெயின் ரோட்டில் உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி ஹேமலதா (வயது 59). இவர் கடந்த 7–ந்தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு

சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் வீட்டுக்குள் அவர் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப் பட்டு அதில் இருந்த பெரிய வெள்ளி குத்து விளக்கு, 

சிறிய வெள்ளி காமாட்சி விளக்கு, குங்குமச் சிமிழ் உள்ளிட்ட 600 கிராம் எடையுள்ள வெள்ளி பூஜை பொருட்கள் திருட்டு போயிருந்தது.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ஹேமலதா வின் வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி பூஜை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. 

இது குறித்து ஹேமலதா கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் விஜயா மற்றும் 

போலீசார் வழக்குப் பதிவு செய்து வெள்ளி பூஜை பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகி ன்றனர்.
Tags:
Today | 19, March 2025
Privacy and cookie settings