படுக்கையை பகிர நினைத்த தயாரிப்பாளரிடம் இருந்து தான் புத்திசாலித் தனமாக தப்பியது எப்படி என்பதை பாலிவுட் நடிகை டிஸ்கா சோப்ரா தெரிவித் துள்ளார்.
ஆமிர்கான் நடித்ததாரே ஜமீன் பர் படத்தில் கற்றல் குறைபாடு உள்ள சிறுவனின் தாயாக நடித்து பிரபலம் ஆனாவர் டிஸ்கா சோப்ரா. 1993ம் ஆண்டு சரத்குமார் நடிப்பில்
வெளியான ஐ லவ் இந்தியா படத்தில் டிஸ்கா தான் ஹீரோயின். இந்நிலையில் டிஸ்கா பட வாய்ப்புக்காக தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்வது பற்றி கூறுகையில்,
பெரிய தயாரிப்பாளர்
என் துவக்க காலத்தில் கையில் படம் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். அப்போது தான் பாலி வுட்டின் பெரிய தயாரிப்பா ளரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
சந்திப்பு நான்
ஹை ஹீல்ஸ் அணிந்து அந்த தயாரிப் பாளரை சந்திக்க மகிழ்ச் சியாக சென்றேன். பாலி வுட்டின் பெரிய தயாரிப்பாளர் ஆச்சே, அதனால் மகிழ்ச்சி யில் இருந்தேன்.
என்னை பார்த்த அவர் ஹீல்ஸ் அணிந்து நடப்பது எப்படி என்று நீ கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
மகிழ்ச்சி
ஒரு பெரிய தயாரிப் பாளர் நம் மீது அக்கறை கொண்டு சொல்கிறாரே என்று மகிழ்ந்தேன். அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். உடனே துள்ளி குதித்து ஓடி வந்து எனது தோழி களிடம் தெரிவித்தேன்.
தோழிகள்
அந்த தயாரிப் பாளர் படத்திலா நடிக்கப் போகிறாய் என்று தோழிகள் அதிர்ச்சியாக கேட்டனர்.
ஏன் என்றதற்கு, அவரின் படத்தில் நடிக்கும் போது அவரது படுக்கை யையும் பகிர வேண்டும் என்பது எழுதப் படாத விதி என்று ஒரு பெரிய குண்டை தூக்கிப் போட்டனர்.
நட்பு
முதலில் மும்பையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தயாரிப்பாளரின் மனைவி, அவரின் துணை இயக்குனர் மகனுடன் நட்பானேன். அப்படியா வது தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைக்க மாட்டார் என நினைத்தேன்.
வெளிநாடு
படப்பிடிப் புக்காக வெளிநாட்டுக்கு ஷூட்டிங் கிற்கு சென்றோம். நானும், தயாரிப்பா ளரும் ஒரே ஹோட்டலில், ஒரே தளத்தில் இருந்தோம்.
மூன்றாம் நாள் படப் பிடிப்புக்கு பிறகு அவர் என்னை இரவு நேரத்தில் தனது அறைக்கு வருமாறு கூறினார்.
போன் அழைப்பு
தயாரிப்பாளரின் அறைக்கு செல்வதற்கு முன்னதாக நான் ஹோட்டல் ஊழியர்களிடம் அவரின் அறைக்கு டெலி போனில் கால் மேல் கால் செய்யுமாறு கூறினேன்.
அவர்களும் போன் செய்தார்கள். தயாரிப்பாளர் கடுப்பாகி விட்டார். அதனால் நான் தப்பித்துக் கொண்டேன்.