லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற போது தனது கைப் பையை எலி கடித்துக் குதறியது குறித்து பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாராப் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரவிடம் ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார்.
பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாராப். அவர் கடந்த 22ம் தேதி லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்து ள்ளார். அப்போது அவர் தனது கைப்பை யை தலைக்கு அருகில் வைத்து தூங்கி யுள்ளார்.
திடீர் என்று எலி சப்தம் கேட்டு கண் விழித்து பார்த்து ள்ளார். பார்த்தால் தலைக்கு அருகில் இருந்த அவரது கைப்பை யை எலி கடித்துக் குதறி யுள்ளது.
உடனே அவர் தனது கைப்பையை புகைப்படம் எடுத்து ட்விட்ட ரில் போட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் தெரிவித் துள்ளார்.
இந்நிலை யில் நிவேதிதா வின் புகாரை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.