அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் !

அதிக நேரம் வேலை செய்வதால் குடும்பம், நண்பர்கள் ஆகியோ ருடன் நேரம் செலவிட முடியாது என்பதை விட, வாரத்துக்கு 50 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை பார்ப்பவர் களுக்கு பக்கவாதம், 
 அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்படும் அபாயம்


இருதயக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வா ளர்கள் கண்டறிந் துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரி யர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், அதிக நேரம் வேலை செய்தால் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 6.03 இலட்சம் பேரிடம், தொடர்ந்து 8.5 ஆண்டுகள் இந்த ஆய்வுகள் மேற் கொள்ளப் பட்டன.


இந்த ஆய்வின் முடிவில் வாரம் 35-40 மணி நேரம் வேலை செய்தவர்களை விட, வாரம் 55 மணி நேரத்துக்கு மேலாக வேலை பார்த்தவர் களுக்கு இதயம் தொடர்பான பிரச்சி னைகள் வருவது 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் 5.28 இலட்சம் பேரிடம் 7 ஆண்டுகள் நடத்தப் பட்ட மற்றொரு ஆய்வில், 55 மணி நேரம் வேலை பார்த்தவர் களுக்கு பக்கவாதம் தொடர்பான பிரச்சி னைகள் வருவது 1.3 மடங்கு அதிகரித்தி ருந்தது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings