பெண்களின் சேஃப்டி முக்கியம் !

பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கும் இன்றைய நிலையில், ஒவ்வொரு பெண்ணும், இக்கட்டான நிலையை சந்திக்கும்போது, உயிர், உடல் மற்றும் உடமைகளைக் காப்பாற்றிக் கொள்ள அறிந்திருக்க வேண்டும். 

இப்போது பெண்கள் பாதுகாப்புக் கென பிரத்யேகமாக தயாரிக்கப் பட்டு சந்தையில் கிடைக்கும் பலவித சாதனங்கள் பற்றிய ஒரு தொகுப்பு இங்கே. பெண்கள் பயணம் செய்யும் போது, 

தனியாக இருக்கும் நேரம் அல்லது எந்த ஒரு வேளையிலும் எமர்ஜென்ஸி ஏற்படும்போது, இந்த சாதனங்களை எதிராளி மேல் உபயோகித்து, தற்காத்துக் கொள்ள தயங்காதீர்கள்.

இவை உபயோகிக்க எளிதானவை. உங்கள் கைப்பையில் அடங்கக் கூடிய அள வுள்ளவை!

1. பெப்பர் ஸ்பிரே (Pepper spray)

‘இந்தியப் பெண்களின் பாதுகாவலன்’ என்று அழைக்கப்படும் இது, கைப்பையில் இருக்க வேண்டிய அவசியமான ஒரு பொருள். இதை நீங்கள் வைத்தி ருப்பதை

பிறர் அறியாதபடி, கீசெயின், பேனா, லிப்ஸ்டிக் போன்ற பலவித வடிவங்களில் அடைக்கப் பட்டு விற்கப் படுகிறது.

எதிராளியின் கண்களை நோக்கி பலம் கொண்டு ஒரு முறை பீய்ச்சும் போது, சருமம், கண்கள் மற்றும் சுவாசப் பகுதிகளை தாக்கி முடக்கி, 

அதிகபட்ச எரிச்சல் மற்றும் வலியோடு தற்காலிக பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். NACX, Xboom, Cobra எனப் பல பிராண்டுகளில் கிடைக்கிறது. ரூபாய் 300 முதல் 800 வரை.

2. மொபைல் ஸ்டன் கன் (Mobile stun gun)

கையடக் கமான மொபைல் போன்ற தோற்றம் (Nokia N-73 போல) கொண்ட இது, சிறந்த ஆபத்பாந்தவன். ஆபத்து நேரத்தில், இதில் உள்ள ஒரு சிறிய பொத்தானை எதிராளியை நோக்கி அழுத்திய உடன், 

உயர் மின்னழுத்த அலைகளை (high voltage beam) உருவாக்கி, மின் அதிர்ச்சியில் நிலை குலையச் செய்து விடும். விலை ரூ.1,000 முதல்...

3. டார்ச் லைட் வித் ஷாக் (torch light with shock effect)

LED பிரகாசத்துடன் ஒளிர்வதோடு, உயர் மின்சார அதிர்ச்சி யையும் வெளியேற்றும் இந்த டார்ச் லைட். 

உங்களைத் தாக்குபவர்கள் மீது உபயோகிக்கும் போது, அவர்கள் நடுங்கும் அளவு மின்சாரத்தை வெளியேற்றி உங்களைக் காக்கும். விலை ரூபாய் 650 முதல்...

4. சேஃப்டி ராட் (Self defense safety Rod)

சுய பாதுகாப்பு மற்றும் தாக்கு தலுக்கான சிறந்த மற்றும் சக்தி வாய்ந்த சாதனம் இது. எடுத்துச் செல்லவும் பயன் பாட்டுக்கும் எளிதான வடிவங்களில் கிடைக்கிறது. 
ஒரு பொத்தானை அழுத்திய உடன் கம்பு போல் நீளும் இது, இக்கட்டான சூழ்நிலையில், எதிராளியின் மீது பிரயோகிக்கும் போது, மரணத்துக்கு ஒப்பான வலியையும் மின் அதிர்ச்சியையும் கொடுக்கும். ரூபாய் 600ல் இருந்து கிடைக்கிறது.

5. பாராகார்ட் மங்க்கி பால் (Paracord Monkey ball)

குரங்கு முடிச்சு என்று பொதுவாக அறியப்படும் இது, வெகு நாளாகவே புழக்கத்தில் இருக்கும் ஒன்று தான். சுய பாதுகாப்புக் கென மேம்படுத்தப் பட்ட வடிவத்தில் இப்போது கிடைக்கிறது. 

கீசெயின் அல்லது பொம்மைப் பந்து போல இருக்கும் இது, எதிராளியை நோக்கி ஒருமுறை சுழற்றி வீசப்படும் போது, அவர்களுக்கு அதீத வலியை ஏற்படுத்தி விடும்.

உள்ளே கனம் மிகுந்த எஃகு பந்து வைத்து, அதன் மேல் நைலான் சுற்றப் பட்டிருக்கும். எளிதான வீச்சிலேயே தாக்க வருபவர்களை சிதறடித்து வலியில் துடிக்க வைக்கும் சிறந்த பாதுகாப்பு சாதனம். ரூபாய் 2 ஆயிரத் துக்குள் விலை.

6. லாக்கெட் மடக்கு கத்தி (Folding knives in a locket)

செயினின் லாக்கெட்டில் அல்லது பேனாக்களில் உள்ளடங்கும் அளவு சிறியதான இந்த மடக்கு கத்தி மிகக் கூர்மையானது. ஒரே ஒரு வெட்டுத் தாக்குதல் கூட மிகக் கொடுமையான வலியை எதிராளிக்கு உண்டாக்கி 

துடிக்க வைத்து, நீங்கள் தப்பிக்க போதுமான, ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும். விலை ரூபாய் 2 ஆயிரத்தில் இருந்து...

7. கையடக்க பாதுகாப்பு அலாரம் (Personal safety alarm with loud noise)

பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வீட்டில் தனியே இருப்பவர் களுக்கான பாதுகாப்பு சாதனங்களில் ஒன்று. இதை வைத்து எதிராளியைத் தாக்க இயலாது. 

ஆனால், இதன் பொத்தானை அழுத்திய உடன் 90 டெசிபல் அளவுக்கு, மிக உரக்கச் சத்தமிட்டு, பிறரின் கவனத்தை ஈர்த்து, உங்களுக்கு உதவ அழைக்கும் அலாரம் இது. பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் கிடைக்கிறது. விலை ரூபாய் 300 முதல்...

8. குத்துவாள் (Concealed stiletto dagger)

கூந்தல் சீர்படுத்தும் பிரஷ் போல தோற்றத்தின் உள்ளே அமைந்திருக்கும், கூர்மையான குத்துவாள். ஃபைபர் கிளாஸ் மெட்டீரியலில் 8 அங்குல நீளத்தில் செய்யப் பட்டிருக்கும் 

இது, எதிராளி நெருங்கும் போது, கைக்கு வந்தவாறு தாக்கி விட்டு தப்பி ஓட உதவும் ஒரு சிறந்த தற்காப்பு சாதனம். ரூபாய் 1,500 முதல் கிடைக்கிறது.

9. கேட் பெர்சனல் சேஃப்டி நக்கிள் கீ செய்ன் (Cat Personal safety knuckle key chain)

பார்க்க அழகாக இருந்தாலும், தாக்கப்படும் எதிராளிக்கு, கடும் வலியைக் கொடுக்கும் கையடக்க பாதுகாப்பு சாதனம் இது. வார்ப்பட பிளாஸ்டிக் அல்லது பித்தளை போன்ற உலோகத்தில் செய்யப் பட்டிருக்கும் .

இதில், விரல்களை நுழைத்துக் கொள்ள துளை இருக்கும். மிகவும் உறுதியான இதை, எந்தத் தற்காப்பும் அறியாத பெண்கள் கூட எளிதாக உபயோ கிக்கலாம். 

கைகளில் உறுதியாகப் பற்றிக் கொண்டு, தொடர்ச்சியாகக் குத்தும் போது, எதிராளி நிலை தடுமாறி விழுவது நிச்சயம்! விலை ரூபாய் 500ல் இருந்து...

10. நிர்பீக் கைத்துப்பாக்கி (Nirbheek Air pistol)

டெல்லி நிர்பயா பாலியல் கொடுமைக்குப் பிறகு, பெண்களின் பாதுகாப் புக்காக, இந்தியத் துப்பாக்கி தொழிற் சாலையில் (Indian ordinance Factory) வடிவமைக்கப் பட்ட கைத் துப்பாக்கி இது. 

கையடக்க வடிவம் கொண்ட இதன் எடை 500 கிராம்தான். எடுத்துச் செல்ல எளிதானது. 50 அடி தூரத்தில், 6 முறை சுடக்கூடிய இதை உபயோகிக்க லைசென்ஸ் தேவை.

விலையும் அதிகம் (தோராயமாக 1 லட்சம் ரூபாய்). இதற்கு மாற்றாக, லைசென்ஸ் தேவைப்படாத Blanca air pistol சந்தையில் கிடைக்கிறது. 

அதன் விலை ரூபாய் 5 ஆயிரத்து 500 முதல். எனினும், எதிராளியின் உயிர் போகும் அபாயம் இருப்பதால், உபயோகத்தில் அதிக கவனம் தேவை.
Tags:
Privacy and cookie settings