ஆடு பகை, குட்டி உறவு என்பார்கள். அது போல சரத்குமார், ராதிகா இடையே மோதலில் இருக்கும் விஷால் அவர்களது மகளும் நடிகையு மான வரலட்சு மியை காதலித்து வருகிறார்.
இவர்கள் இருவரு க்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பேசப் பட்டது.
இந்நிலை யில் நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருக்கும் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கினார்.
இதனை அறிந்த திரையுலகமே அதிர்ச்சிய டைந்தது. சரத்குமா ரின் மனைவி ராதிகா டுவிட்டரில் விஷாலை சூனியக் காரன் என திட்டி தீர்த்தார். சரத்குமாரோ இதனால் மிகவும் மனமுடை ந்து காணப் பட்டார்.
இதனை யெல்லாம் கூர்ந்து கவனித்த வரலட்சுமி தந்தையின் வருத்தத்தை பார்க்க முடியாமல் தவித்ததாக பேசப்பட்டது. இதனால் கோபமடைந்து விஷாலை திட்டியதாக சமூக வலை தளங்களில் நேற்று செய்திகள் பரவியது.
என் அப்பாவை சீண்டாதே தாங்க மாட்டே என வரலட்சுமி விஷாலிடம் கூறியதாக கூறப்ப டுகிறது