இந்திய நாட்டுக் குள்ளே அகதிகளாக 1991-ம் ஆண்டு பல லட்சம் தமிழர்கள் கர்நாடகா வை விட்டு தமிழகம் திரும்பிய அதே பெருந் துயரம் மீண்டும் நிகழ்ந்து வருகிறது...
கன்னடர் களின் தற்போதைய வன்முறை யால் இதுவரை பெங்களூரு நகரை விட்டு அங்கு வசித்து வந்த 1 லட்சத்து க்கும் அதிகமான தமிழர்கள் சாரை சாரையாக வெளியேறி தமிழகத் துக்கு திரும்பி வருகின்றனர்.
தமிழகத்து க்கு காவிரியில் நீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கர்நாட கத்தில் நேற்று முன் தினம் நிகழ்த்தப்பட்ட வன்முறையில்
52 ஆம்னிப் பேருந்துகள், 50 லாரிகள், 20 கார்கள் தீ வைத்து எரிக்கப் பட்டன. நூற்றுக் கணக்கான தமிழக பதிவெண் கொண்ட லாரிகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன.
இதனால் தமிழக - கர்நாடகம் இடையே வாகனப் போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப் பட்டது.
1991-ம் ஆண்டு காவிரி பிரச்சனைக்காக நிகழ்த்தப் பட்ட வன்முறை மீண்டும் அரங்கேற்றப் பட்டதால் அங்குள்ள தமிழர்கள் தமிழகத் துக்கு திரும்பத் தொடங்கி யுள்ளனர்.
கர்நாடகத்தில் இருந்து எல்லையான அத்திப்பள்ளி வரை வரும் தமிழர்களை அங்கிருந்து ஒசூர் வரை
இலவசமாக அழைத்து வருவதற்காக தமிழக அரசுப் பேருந்துகள், போலீஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
வாகனப் போக்குவரத்து நிறுத்தம்
ஒசூர் அருகே தமிழக கர்நாடக மாநில எல்லையில் பாதுகாப்பு க்காக 300-க்கும் மேற் பட்ட இரு மாநில போலீஸார், துணை ராணுவத்தினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
நேற்றும் இரு மாநிலங் களிடையே வாகனங்கள் இயக்கப் படவில்லை.
1 லட்சம் பேர் வெளியேறினர்..
தமிழகத்தில் இருந்து சென்ற தொழிலா ளர்கள், பொறியியல் பட்டதாரி கள் உள்ளிட் டோர் என 1 லட்சத்து க்கும் மேற்பட் டோர் தமிழகம் திரும்பி யுள்ளனர்.
கடந்த 2 நாள்களாக கர்நாடக த்தில் இருந்து தமிழர்கள் தொடர்ந்து வெளியேறி தமிழகம் திரும்பிக் கொண்டிருக் கின்றனர்.
உடைமை களை விட்டு விட்டு...
கர்நாடக த்தில் தமிழ்ப் பேசினாலே தாக்குகின்றனர். பல லட்சம் தமிழர்கள் வன்முறைச் சம்பவங்களை தொலைக் காட்சிகளிலும்,
செய்தித் தாள்கள் மூலமும் தெரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக் குள்ளேயே முடங்கியுள்ளனர்.
பல ஆயிரத்து க்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்களது உடமைகளை விட்டு விட்டு உயிர் பிழைத்தால் போதும் எனத் தப்பியோடி வந்து கொண்டிருக் கின்றனர்.
கர்நாடகாவில் வாழ முடியுமா?
கர்நாடகாவில் இனி தமிழர்கள் நுழையவோ வாழவோ முடியுமா? என்ற கேள்வியை கடந்த ஒரு வார வன் முறைச் சம்பவங்கள் எழுப்பி உள்ளன.
அதே நேரத்தில் தமிழகத்தில் கன்னடர்கள் பாதுகாப்பாக இருப்பத ற்காக அனைத்து ஏற்பாடு களையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
Tags: