காவிரியிலி ருந்து வரும் 20ம் தேதிவரை தமிழகத் திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட சட்ட நடவடிக் கை என்ன என்பது
குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, உயர் அதிகாரிக ளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பெங்களூரி லுள்ள முதல்வரின் அரசு இல்லமான 'காவிரி'யில், காவிரி தொடர்பான கூட்டம் நடை பெறுகிறது.
இதில் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டில், சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, மாநில தலைமை செயலர் அரவிந்த் யாதவ்,
அட்வகேட் ஜெனரல் மதுசூதன் நாயக், நீர்வளத் துறை அமைச்சக முதன்மை செயலாளர் ராகேஷ் சிங், மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா, சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் மோகன் கடர்கி உள்ளிட்டோர் இக்கூட்டத் தில் பங்கேற்று ள்ளனர்.
தினமும் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம், வரும் 20ம் தேதிவரை தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 20ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணை க்கு வரும் என்றும் சுப்ரீம் கோர்ட் கூறியு ள்ளது.
எனவே 20ம் தேதி கர்நாடகா எந்த மாதிரியான சட்ட நிலைப் பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத் தில் ஆலோசிக்கப் பட்டு வருகிறது.