மங்களூர் பல்கலைக் கழகத்தில் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் மாணவிகளின் கழிவறையில் செல்போனை வைத்து ரகசியமாக வீடியோ எடுத்து போலீசில் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சந்தோஷ் (22). தக்ஷின கன்னடா மாவட்ட த்தில் உள்ள சுல்லி யாவை சேர்ந்தவர்.
அவருக்கும், சக மாணவி க்கும் இடையே விவாதம் நடந்தது. பையன் கள் கிழிந்த உள்ளாடைகளை அணி வார்கள், பெண்கள் நல்ல உள்ளாடை களை அணிவார்கள் என்று அந்த மாணவி கூறியிருக்கிறார்.
இதை மறுத்த சந்தோஷை தனது நிலையை நிரூபிக் குமாறு மாணவி சவால் விட்டிருக்கிறார். சவாலை ஏற்றுக் கொண்ட சந்தோஷ் அருகில் உள்ள மாலில் இருந்து பவர் பேங்க் மற்றும் செல்போனை வாங்கினார்.
பல்கலைக் கழகத்தில் பயோ சயன்ஸ் துறையில் தான் பாதுகாப்பு குறைவு என்பதை உளவு பார்த்து தெரிந்து கொண்ட சந்தோஷ் அதிகாலையில் அங்கு சென்று மாணவிகளின்
கழிவறையில் செல்போனை வைத்து வீடியோ ரெக்கார்டிங்கை ஆன் செய்து வைத்து விட்டார். கழிவறையில் செல்போன் இருந்ததை கண்டு பிடித்த மாணவிகள் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி சந்தோஷை கைது செய்தனர். சந்தோஷ் கேமரா ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை பார்க்க செல்போன் வாங்கிய கையோடு அந்த கடையை புகைப் படம் எடுத்து அதை அழிக்க மறந்து விட்டார்.
அந்த புகைப் படத்தால் தான் போலீசில் சிக்கினார். செல்போனை கழிவறை யில் வைத்த பிறகு சந்தோஷ் பெங்களூ ருவுக்கு சென்று விட்டார். அங்கிருந்து அவர் டெல்லிக்கு செல்ல திட்ட மிட்டார்.
ஆனால் பெங்க ளூரில் காவிரி விவகாரம் தொடர்பாக பிரச்சனை யாக இருந்த தால் அவரால் டெல்லி செல்ல முடிய வில்லை.
சந்தோஷ் பள்ளி காலத்தில் இருந்து அனைத்து பாடங்களிலும் 95 சதவீதத் திற்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து வந்துள்ளார். ஒரு மாணவியிடம் சவால் விட்டு தனது வாழ்க்கையை கெடுத்துக் கொண் டுள்ளார்.