ஆசிரியரை குத்திக் கொலை செய்த மாணவர் !

வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரை இரு மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஆசிரியரை குத்திக் கொலை செய்த மாணவர் !
மேற்கு டெல்லியில், நங்கோலி என்னும் இடத்தில் உள்ள ஒரு மாணவர் உயர் நிலை ப்பள் ளியில் நேற்று ஒரு தேர்வு நடந்து கொண்டி ருந்தது. 
ஒரு வகுப்பில் முகேஷ் குமார் (45) என்ற ஹிந்தி ஆசிரியர் கண்காணி பாளராக நியமிக்கப் பட்டி ருந்தார். அப்போது, அங்கு அதே பள்ளியில் +2 படிக்கும் ஒரு மாணவன், அந்த வகுப்பில் நுழை ந்து அந்த ஆசிரியரை தாக்கியு ள்ளான். 

அந்த மாணவ னோடு சேர்ந்து, அதே அறையில் இருந்த இன்னொரு மாணவனும், அந்த ஆசிரியரை தாக்கி யுள்ளான். அவர்கள் இருவரும் தாக்கியதில் ஆசிரியர் முகேஷ் தடுமாறி விழுந்தார். 

அப்போது ஒரு மாணவர், தான் மறைத்து வைத் திருந்த கத்தியால் அவரை குத்தி னான். அதன் பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி விட்டனர்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணம் அடைந்தார். 
தவறான நடவடிக்கை காரணமாக, அந்த ஆசிரியரின் வகுப்பில் இருந்த 6 மாணவர்களின் மீது நடவடிக்கை எடுத்ததால், அந்த மாணவர்கள், அவரின் மீது கோபமாய் இருந் ததாக தெரிகிறது.

அந்த மாணவர் களும், அவர்களின் பெற்றோர் களும் கடந்த சில நாட்களாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக, முகேஷ் ஏற்கனவே அப்பள்ளி யின் தலைமை ஆசிரியரிடம் கூறியிரு ந்தார். 

இந்நிலையில் தான், 2 மாணவர் களால் தாக்கப்பட்டு உயிரழ ந்துள்ளார். அந்த இரு மாணவர் களும் தற்போது கைது செய்யப் பட்டுள்ளனர். 
மாணவர் களில் ஒருவனு க்கு 18 வயது எனவும், இன்னொரு வனுக்கு இன்னும் இரண்டு மாதத்தில் 18 வயது ஆக உள்ளது என்றும் போலீசார் கூறினர். 
இந்த சம்பவம் அந்த பகுதி யில் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. மரணம் அடைந்த முகேஷின் குடும்பத் திற்கு ரூ.1 கோடி நிவாரண மாக வழங்கப் படும் என டெல்லி அரசு அறிவித் துள்ளது.
Tags:
Privacy and cookie settings