ராம்குமார் கைது செய்யப் பட்டதில் இருந்தே இந்த கொலையை ராம்குமார் செய்ய வில்லை என குரல் எழுப்பி வந்தார் தேசிய கொடியை எரித்து கைதான திலீபன் மகேந்திரன். ராம் குமாரின் ஃபேஸ்புக் கணக்கில் சென்று இந்த கொலை குறித்து பதி விட்டு பரபரப்பை ஏற்படு த்தினார்.
சுவாதியை கொலை செய்தது ராம்குமார் இல்லை, பாஜகவை சேர்ந்த கருப்பு முருகான ந்தம் தான் என கூறிய தால் திலீபன் மீது கருப்பு முரு கானந்தம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கைது செய்யப் பட்டு ஜாமீனில் வெளியே வந்திரு க்கும் திலீபன் மகேந்திரன் ராம்குமார் மரணம் குறித்து தற்போது பேசியுள்ளார்.
அதில், ராம்குமார் யார் என்பது சுவாதிக்கும், சுவாதி யார் என்பது ராம் குமாருக்கும் தெரியாது. சுவாதியை காதலித் ததாக நாடகம் நடத்தி, அப்பாவி ராம் குமாரை கொன்று விட்டார்கள்.
ராம் குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆரம்பம் முதலே கூறி வந்தோம். ராம் குமாரின் ஃபேஸ்புக் கணக்கை ஆராய்ந் ததில் அவருக்கு சுவாதி யுடன் தொடர்பு இருந் ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தற்கொலை செய்து கொண்டு இறந்த டி.எஸ்.பி.விஷ்ணுப் பிரியாவின் செல்போனில் உள்ள தகவல் களை வெளியிட்ட காவல் துறை சுவாதியின் செல்போன் மற்றும் லேப்டாப்பில் உள்ள தகவல் களை ஏன் வெளியிட வில்லை.
சுவாதி கொலை நடந்த அடுத்த நாள், சுவாதி இரண்டு வருடங் களுக்கு முன்னர் ஒரு வரை காதலித்ததாக வந்த தகவலை சுவாதியின் அக்கா நித்யா உடனடி யாக மறுத்தார்.
ஆனால் சுவாதியை ராம்குமார் காதலித்தார் என காவல் துறை சொன்ன போது அதை மறுக் காமல் நித்யா ஏன் அமைதியாக இருந்தார் என திலீபன் அதிரடி யாக கேட்டுள்ளார்.