தமிழகத்தில் சுவாதி…. பாலக்காட்டில் தான்யா !

1 minute read
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில், அவரை ஒரு தலையாக காதலித்த ராம்குமார் என்பவர் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
தமிழகத்தில் சுவாதி…. பாலக்காட்டில் தான்யா !
இந்த வழக்கு தமிழக மெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. அதே போல், கேரளாவில் நடந்த இந்த ஒரு தலைக் காதல் கொலை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தான்யா. இவரை இதே பகுதியைச் சேர்ந்த ஜாஹீர் என்பவர் ஒரு தலையாக காதலித் துள்ளார்.

இந் நிலையில் தான்யாவுக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாஹிர், தான்யாவின் வீட்டுக்குள் நுழைந்து தான்யாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். 

பின்னர் அவரும் தற்கொலை செய்ய முயன்றார். இப்போது ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் ஜாஹீர் அனுமதிக்கப் பட்டுள்ளார். 

இந்த வழக்கில் உடனடி நடவடிக்கை எடுக்க கேரள பாஜகவினர் போராட்டத் தில் இறங்கி யுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:
Today | 2, April 2025
Privacy and cookie settings