தமிழகத்தில் 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை தரமணி, காஞ்சிபுரம், விழுப்புரம், ஆவடி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் இந்த மையங்கள் அமைக்க ப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
சீமன்ஸ் மற்றும் டிசைன்டெக் லிமிட்டெட் நிறுவனங் களுடன் இணைந்து ரூ.546 கோடி செலவில் இந்த திறன் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசின் பங்காக ரூ.56 கோடியே 68 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
திறன் வளர்ச்சி மையங்களில் பயிற்சி பெறுபவர்கள் பிற நிறுவனங் களுக்கு பயிற்சி அளிப்பர். இதில் 20,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
மேலும் செங்கல் பட்டில் ரூ.28 கோடி செலவில் கட்டுடான திறன் பயிற்சி நிலையம் அமைக்கப் படும் என்றும் ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
தொழிலாளர் மருந்த கங்கள்
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தக ங்கள் ரூ.12.70 கோடி செலவில் 11 இடங்கயில் புதிதாக அமைகப்படும் என ஜெயலலிதா அறிவித் துள்ளார்.
ஊத்துக் குளி, துரை சாமிபுரம், மணச் சநல்லூர், கல்பாக்கம், மாமல்லபுரம், அத்திபட்டு, திரு முடிவாக்கம், குளத்தூர்,
பண்ருட்டி, குலசேகரம், பெருமா நல்லூா் உள்ளிட்ட இடங்களில் இவை அமைக்கப் பட உள்ளன.
மேலும் 6 கூட்டுறவு நூற்பாலை களில் சுமார் ரூ.14 கோடியில் நவீன இயந்திரங்க ளை நிறுவ முதலமைச்சர் ஆணை வெளியிட்டுள்ளார்.
மேலும் நெசவாளர்க ளுக்கான ஆண்டு காப்பீட்டுக் கட்டணத் தொகையில் 50% மானியம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.