ஜார்ஜியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி மூவர் பலி !

1 minute read
ஜார்ஜியாவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்து நேரிட்டதில் மூவர் உயிரிழந்தனர்.
ஜார்ஜியாவில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி மூவர் பலி !
மேற்கு ஜார்ஜியா பிராந்திய விமான நிலையத்தில் ஒரு என்ஜின் கொண்ட இரு சிறியரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. 

விமான நிலையம் அட்லாண்டாவில் இருந்து சுமார் 45 மைல் தொலைவில் காரோல்டானில் அமைந்து உள்ளது. விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பேர் பலியாகி உள்ளனர்.

என்று அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானம் விபத்துக்குள் சிக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விமானங்கள் ஓடு தளத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. இரு விமானங்களும் தரை யிறங்க முயற்சித்த போது மோதி விபத்துக்குள் சிக்கி உள்ளது 
என்று குறிப்பிட்டு உள்ளனர். விபத்தில் சிக்கிய விமானங்கள் டைமன்ட் ஏர்கிராப்ட் DA20C1 மற்றும் பீச் F33A ரகத்தை சேர்ந்தவை என்று தெரிவிக்கப் பட்டு உள்ளது.
Tags:
Today | 18, April 2025
Privacy and cookie settings