ஒரு டம்ளர் ஜூஸ் தைராய்டு பிரச்சனையை போக்கும்?

ஆயிரக்கண க்கான மக்கள் அவஸ்தைப் படுவது தைராய்டு பிரச் சனையால் தான். குறிப்பாக இப்பிரச்ச னையால் பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படு வார்கள். 


ஆனால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சனை யால் தான் இவ்வளவு கஷ்டம் என்று தெரிவ தில்லை.

தைராய்டு என்பது தொண்டை யின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந் துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல் பாடுகளி லும் ஈடுபட்டு வருகிறது.

இந்த சுரப்பியில் சிறு பிரச்சனை ஏற்பட் டாலும், அது உடலின் மற்ற பாகங் களிலும் பிரச்சனை களை உண்டு பண்ணும். தைராய்டு சுரப்பியில் இரு வகையான பிரச்ச னைகள் ஏற்படும்.

இப்போது அவற்றைப் பற்றியும், தைராய்டு பிரச்சனை களைத் தடுக்கும் ஜூஸ் குறித்தும் காண்போம்.

கழுத்தின் அமைந் துள்ள தைராய்டு சுரப்பியில் இரு வகையான பிரச்சனை களை சந்திக்க நேரிடும். அவை:

* ஹைப்பர் தைராய்டு

* ஹைப்போ தைராய்டு

ஹைப்பர் தைராய்டு என்னும் நிலை தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோ ன்களை சுரப்பதால் ஏற்படு வதாகும்.

ஹைப்பர் தைராய்டு ஒரு வருக்கு இருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும். அவை பெரிய கண்கள், அதிகமாக வியர்வை வெளி யேறுவது, மிகுதியான சோர்வு, திடீர் உடல் எடை குறைவு, கவனச் சிதறல், வயிற்றுப் போக்கு போன்றவை.

தைராய்டு சுரப்பி போதிய அளவின்றி குறைவான அளவில் தைராய்டு ஹைர் மோன்களை சுரந்தால், அந்நிலையை ஹைப்போ தைராய்டு என்று அழைப்பர்.

முகம் வீங்கி காணப்படுவது, உடல் பலவீனம், உடல் சோர்வு, மலச்சிக்கல், காரண மின்றி திடீரென்று உடல் பரு மனடைவது, சரும வறட்சி போன்றவை ஹைப்போ தைராய்டு இருப்ப தற்கான அறிகுறி களாகும்.


இப்போது தைராய்டு பிரச்சனை களை சரிசெய்ய உதவும் ஜூஸை எப்படி செய்வ தென்று பார்ப்போம்.
சர்க்கரை யில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்

தண்ணீர் - 8 டம்ளர்

இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்

பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்

எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்

மேலே கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.

இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்ட பாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங் களைக் காணலாம். அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல் பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார் மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.
Tags:
Privacy and cookie settings