தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக் கரசர் நியமனம் செய்யப் பட்டுள்ளார். டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்தன திவேதி இதனை அறிவித்தார்.
ஈவிகேஎஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ததை அடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி 4 மாதமாக காலியாக இருந்தது.
இதனையடுத்து இன்று தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப் பட்டுள்ளார்.
திருநாவுக் கரசர் நன்றி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தம்மை தேர்வு செய்த சோனியா காந்திக்கு நன்றி தெரிவித் துள்ளார்.
காங்கிரசின் அனைத்து தலைவர் களையும் ஒருங்கி னைத்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபட உறுதி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்வான திருநாவுக் கரசருக்கு முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து தெரிவித் துள்ளார்.
தொண்டர்களை ஒருங்கினைத்து சென்று கட்சியை முன்னேற செய்ய வேண்டும் என அவர் தெரிவித் துள்ளார்.
திருநாவுக் கரசர் வலியுறு த்தல்
காவிரி பிரச்சினை க்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர் வலியுறுத் தியுள்ளார்.
கர்நாடகத்தில் தமிழர்களின் லாரிகள், பேருந்துகள், சொத்துக் களை சேதபடுத்து வதை நிறுத்த வேண்டும் என அவர் தெரிவி த்துள்ளார்.
கர்நாடகத்தில் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி தலையிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத் துள்ளார்.
திருநாவுக் கரசர் வரலறு
1972-ம் ஆண்டு தமிழக அரசியலில் நுழைந்தவர் திருநாவுக் கரசர். 1997-ம் ஆண்டு அறந்தாங்கியில் இருந்து சட்டப் பேரவைக்கு திருநாவுக்கரசர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
மேலும் அவர் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 6 முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஆவார்.
மத்திய, மாநில அமைச்சர்கள் உள்பட பல்வேறு பதவிகளை திருநாவுக்கரசர் வகித்தார். வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், விவசாயி, சமூக சேவகர், என பன்முக தன்மை கொண்டவராக விளங்கியவராவர்.
1999-ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
கப்பல் போக்குவரத்து, தகவல் தொழில் நுட்பத்துறை இணையமை ச்சராகவும் பதவி வகித்தார். 2004-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங் களவை உறுப்பின ராகவும் தேர்வு பெற்றார்.