இன்று வீடு திரும்புகிறார் ஜெயலலிதா !

1 minute read
உடல் நலக்குறை வினால் கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட ஜெயலலிதா, இன்று வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகி யுள்ளதால் அதிமுக தொண்டர்கள் உற்சாக மடைந்துள்ளனர். 
இன்று வீடு திரும்புகிறார் ஜெயலலிதா !
முதல்வர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவ மனையில் கடந்த 22ம் தேதி நள்ளிர வில் அனுமதிக்கப் பட்டார். 

அவர் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருந்தது.

இதை யடுத்து அவருக்கு அன்றைய தினமும், மறுநாள் 23ம் தேதி அன்றும் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டது. இதன் மூலம் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இதை யடுத்து முதல்வர் வழக்க மான உணவு களை சாப்பிடத் தொடங்கினார். தொடர்ந்து முதல்வர் மருத்துவக் கண்காணிப் பில் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலை யில் 

சமூக வலைத் தளங்களில் முதல்வ ரின் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவின. இதனால் அதிர்ச்சி யடைந்த அதிமுகவினர் தொடர்ந்து கோவில் களில் பிராத்தனை, சிறப்பு யாகங்கள் செய்து வருகின்றனர். 

இதனை யடுத்து செய்தியாளர் களிடம் பேசிய அப்பல்லோ மருத்து வர்கள், சிகிச்சைக் காக முதல்வர் ஜெயலலிதா வெளி நாட்டுக்கு அழைத்துச் செல்லப் படுவதாக பரப்பப் படும் வதந்திகள் முற்றிலும் பொய்யா னவை. 
அடிப்படை ஆதார மற்றவை. முதல்வரை சிகிச்சைக் காக வெளி நாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அதற்கான அவசியமும் தற்போது இல்லை. 

மருத்துவ சிகிச்சைகளை முதல்வர் நல்ல முறையில் ஏற்று வருகிறார். முதல்வர் பூரண நலம்பெற இன்னும் சில தினங்கள் மருத்துவ மனையில் ஓய்வெ டுக்க வேண்டு மென்று அறி வுறுத்தி இருக் கிறோம். 

எனவே, இன்னும் சில தினங்களில் மருத்துவ மனையில் இருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் செய்யப் படுவார் என்று ஞாயிறு மாலையில் மருத்து வர்கள் தெரிவித் தனர்.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதால் அதற்கான ஏற்பாடு கள் நேற்று மாலை முதல் ஆரம்பி த்து விட்டது. 
போயஸ் தோட்டத் தில் அவர் ஓய்வு எடுக்க சிறப்பு மருத்துவ ஏற்பாடு களை அப்பல்லோ மருத்துவ மனை மருத்துவ ர்கள் செய்து ள்ளனர். 

இன்று எந்த நேரமும் அவர் மருத்துவ மனையில் இருந்து போயஸ் தோட்ட வீட்டிற்குத் திரும்புவார் என மருத்துவ மனை வட்டாரங் கள் தெரிவிக் கின்றன.
Tags:
Today | 30, March 2025
Privacy and cookie settings