விவசாய மற்றும் வணிகர் சங்கங்களின் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
நாளைக்கு பதிலாக சனிக்கிழமை யன்று பள்ளிகள் இயங்கும் என்றும் தனியார் பள்ளி உரிமையா ளர்கள் சங்கம் அறிவித் துள்ளது.
கர்நாடகா வில் தமிழர்கள் தாக்கப் பட்டதைக் கண்டித்து தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நாளை நடை பெறுகிறது.
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெரும்பா லான அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன.
அதேபோல் தனியார் பேருந்து உரிமையாளர் களும் ஆதரவு தெரிவித்து ள்ளனர். இந்த போராட்டத்துக்கு தனியார் பள்ளி உரிமை யாளர் சங்கமும் ஆதரவளிப் பதாக அதன் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.
இதனால் நாளை 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. அனைத்துக் கும் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
இதற்கு பதிலாக நாளை மறுநாள் சனிக்கிழமை யன்று தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப் பட்டிருக்கிறது.