சமூக சேவகர் டிராபிக் ராமசாமி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையிலும் மதுரையிலும் இவர் ரொம்பவே பிரபலம்,.
இவரது சமூக சேவைகளை பாராட்டி சார்க் நாடுகளுக்கான சர்வதேச பொருளாதாரப் பல்கலை கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி யுள்ளது. இந்த விழா சமீபத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்தது.
இந்த விழாவுக்கு பின்னர் செய்தியாளர் களுக்கு அவர் பேட்டிய ளித்தார். அப்போது ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு குறித்து அவர் கூறிய தாவது:
'ஜெயலலிதா சிறை செல்வதைத் தடுக்க முடியாது. நீதிபதிகளை இவர்கள் விலைக்கு வாங்கலாம். ஆனால், நீதியை விலைக்கு வாங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
வருமானத்துக்கு மேல் சொத்துச் சேர்ப்பது எப்படிச் சரியாகும்? அது, ரூ.10 கோடியாக இருந்தா லும் சரி.. 1 ரூபாயாக இருந்தா லும் சரி, சொத்தாகத் தான் கருத வேண்டும்.
இந்த வழக்கை சாதாரண சொத்துக் குவிப்பு வழக்காக மட்டுமே பார்க்க வேண்டும். அரசியல் வழக்காக அணுகக் கூடாது. ஆனால் இதன் தீர்ப்பு ஓர் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.