பாலிவுட் நடிகை வித்யாபாலன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறா ராம். பாலிவுட்டில் கான்களுக்கு நிகராக நடிப்பில் அசத்தி வருபவர் வித்யா பாலன். ஹீரோவுக்காக படம் ஓடுவது போன்று வித்யாவுக்காக படம் ஓடும்.
வித்யா கஹானி படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் பேகம் ஜான் ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார். கஹானி 2 படத்தின் ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்ற வித்யா நாடு திரும்பி யுள்ளார்.
மும்பைக்கு வந்த அவரின் உடல் நலம் பாதிக்கப் பட்டது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்து ள்ளனர்.
இது குறித்து வித்யாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகை யில், வித்யா டெங்குவால் அவதிப்பட்டு வருகிறார். அவரை 10 நாட்கள் ஓய்வில் இருக்கு மாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர் என்றார்.