ஜேர்மனி மூனிச் நகரில் இருந்து பல்மா ஏர்போட் நோக்கி பயணித்த ஏ- 320 ரக போயிங் விமானம் மீது பெரும் பிணந்தின்னிக் கழுகு ஒன்று மோதியுள்ளது.
ஜேர்மனியின் லுப்தான்ஸா விமானம் சுமார் 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த வேளை குறித்த ராட்சச கழுகு விமானத் தின் மூக்குப் பகுதியில் வந்து மோதியு ள்ளது.
இதனை தன்னால் தவிர்க்க முடிய வில்லை என்று விமானி தெரிவித் துள்ளார். இதனால் விமானம் சிறிது சேதத்திற்கு உள்ளாகியது.
இதே வேளை கழுகின் முகப்பகுதி விமானத்தின் முன் பகுதியை துளைத்து பாதி உள்ளே சென்று விட்டது.
குறிப்பாக விமானங் கள் டைட்டானி யம் என்ற இலகு ரக மற்றும் அதி கடுமை யான உலோகத் தால் செய்யப் படுகிறது.
அது போன்ற பாரிய உலோகத்தை கழுகு ஒன்று சேதப்படுத்தி யுள்ளது என்பது ஆச்சரியம் தரும் விடையம் தான்.
ஆனால் அதன் வேகமே இதற்கு காரணம் என்கிறார்கள். விமானி உடனடி யாக விமானத்தை பாதுகாப் பாக தரையிறக்கி யுள்ளார். இதில் எவரும் பாதிக்கப்பட வில்லை என்பது ஒரு புறம் இருக்க.
விமான தரையி றங்கிய பின்னர் கூட அக் கழுகின் உடல் விமானத் தில் இருந்து ள்ளது என்பது ஆச்சரிய மான விடையம். அந்த அளவு கழுகின் உடல் விமானத் தின் முன் புறத்தில் துளை ஒன்றை போட்டு ள்ளது.