நெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா?

2 minute read
இதற்கான அறிவியல் விளக்கம் என்ன வென்று தெரிந்து கொண்டால், வியப்ப தற்கு ஏது மில்லை, தெய்வச் செயல் என்று ஏமாறவும் தேவை யில்லை,
நெருப்பில் இறங்கி நடப்பது தெய்வச் செயலா?
முதலில் நெருப்புக் குண்டம் அமைப்பது மரக்கட் டைகள் அல்லது நிலக்கரி களால் தான். அவைகள் நெருப்பு மூட்டப்ப ட்டு எரிந்த நிலையில் பார்த்தோ மானால் அவற்றைச் சுற்றி சாம்பல் பூத்து விடும்.

அந்தச் சாம்பல் அதன் கீழே இருக்கும் நெருப்பி ற்கும் நம் காலுக் கும் இடையே ஒரு insulator போன்று செயல்பட்டு அதன் கீழே இருக்கும் வெப்பத் தினை நம் தோலுக்குக் கடத்தப் படுவதைத் தாமதிக் கச் செய்யும்.

இரண்டாவது, நிலக்கரி கள் என்பது பெரும் பாலான கார்பன் அணுக்க ளாலும், காற்றறை களாலும் அமைந்ததாக இருக்கும். 
அப்படி இலகு எடை கொண்ட கார்பன் அமைப்பானது வெப்பத் தினை எளிதில் கடத்தாது. அது வல்லாமல் ஒரு இரும்புப் பாளத்தை அடியில் நெருப்பு வைத்து சூடாக்கி அதன் மேல் நடந்தால், 

அவ்வளவு தான், தோல் பொசுங்கி, சதை பொசுங்கி நமக்கு மூன்றாம் நிலை தீக்காயங் கள் ஏற்படும். 

காரணம் இரும்புப் பாளத்தின் வெப்பம் எந்த வித தடையும் இன்றி எளிதில் நம் காலுக்குத் தொடர்ந்து கடத்தப் படும். விளைவு... தீக்காயம்.

மூன்றா வது, நெருப்பில் நடப்பவர் மெதுவாக நடப்ப தில்லை, நெருப்பின் மேல் நீண்ட நேரம் நிற்பதும் இல்லை. 

நெருப்புக் கங்குக ளில் இருந்து வெப்பம் நம் கால் தோலுக்குக் கடத்தப் படுவது மெதுவா கவே நிகழும் என்றாலும்,
வெப்பம் நிச்சயம் கடத்தப் படத் தான் செய்யும். நாம் நீண்ட நேரம் அதில் நிற்போ மானால் நிச்சயம் நமக்குத் தீக்காயம் ஏற்படும். 

ஆக, விறு விறு வென்று நடந்து விட்டோ மானால் நெருப்பின் வெப்பம் நம் காலைச் சுடாது.

அது போகவும், இயற்கை யாக நம் காலில் வெளிப் படும் வியர்வை மிகச்சிறிய அளவில் வெப்பத் தினைக் குறைக்கப் பயன்படும். 

நம் ஊரில் நெருப்பில் இறங்கி நடப்பவர் உடல் முழுக்கத் தண்ணீரை ஊற்றிக் கொள்வர். அல்லது பாதங் களில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு நடப்பர். 

இது வும் வெப்பத் தினைக் குறைக்கும் ஒரு முயற்சியே.மேலும், முதல் 10 பேர்கள் நடந்து சென்று விட்டால் அந்த இடத்தில் இருந்த நெருப்பு அணைந்து விட்டிருக்கும். 

அதன் மேல் தான் அடுத்த 10 பேர்கள் நடந்து செல்வா ர்கள். அவர்களுக்கு சுடவே சுடாது. அதன் பின்னர் தான் அந்த விடத்தில் அருகே உள்ள நெருப்பை வாரிப் போடுவா ர்கள்.
ஆக, நெருப்பில் நடக்கும் பொழுது நமக்குச் சுடாமல் இருக்க மூன்று காரணி கள் இருக்கி ன்றன.

1. வெப்பம் அரிதிற்கடத்தப்படுவது

2. வெப்பத்தடை

3. நெருப்பிற் கும் காலிற்கும் இடையே யான குறுகிய காலத் தொடர்பு
மன வுறுதி கொண்ட யார் வேண்டு மானாலும் அப்படி நெருப்பில் நடக்கலாம். சிலருக் கு சிறுசிறு தீக்காயங் களும் ஏற்படலாம். இதில் அதிசயம் ஏதும் இல்லை. மாறாக அறிவி யலே உள்ளது.
Tags:
Today | 28, March 2025
Privacy and cookie settings