நடிகர் கஞ்சா கருப்பு இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந் துள்ளார். எந்தக் கட்சியிலும் சேரவில்லை.
எந்த கட்சியிலாவது சேர நினைத்தால் நானும் நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம் என்று தேர்தலின் போது பேட்டியளித்த கஞ்சா கருப்பு, இப்போது தனி ஆளாக போய் அதிமுகவில் இணைந் துள்ளார்.
மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப் பேட்டை ஒம்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன் கிழமை காலை நடை பெற்றது.
இதில் நடிகர் கஞ்சா கருப்பு, த.மா.கா. கட்சியில் இருந்து விலகிய திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டை மான்,
முன்னாள் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் ஆகியோர் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை வழங்கினார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் பலர் பங்கேற்றனர்.
தேர்தல் பிரச்சாரம் கடந்த சட்டசபை தேர்தலின் போது சுயேச்சை யாக போட்டி யிட்ட முத்து மணிக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாள ர்களிடம் பேசிய அவர்,
என்னை யாராவது அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் 4 நாட்களுக்கு மட்டும் முதலமைச் சர் பதவியை கேட்டு பெறுவேன். அதற்குள் செய்ய வேண்டியதை செய்து விடலாம் என்று கூறினார்.
ஷகிலா உடன் கஞ்சா கருப்பு
நான் முதல்வர் ஆனால் பள்ளியில் மதிய உணவுவக்கு மாணவர் ஒருவருக்கு முழு கோழி ஒன்று வழங்கப் படும். இது நகைச் சுவைக்காக நான் சொல்ல வில்லை என்று கூறினார் கஞ்சா கறுப்பு.
பல்வேறு கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அப்படி அரசியல் கட்சியில் இணைந் தால் நானும் நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம்.
இலவச கல்வி
என்னிடம் மேனேஜராக இருந்தவர் மூன்றரை கோடி ரூபாய் சுருட்டிக் கொண்டு போய் விட்டார். இப்போது படம் எடுக்கிறோம் என்று சொல்லி ஒருவன் இரண்டரை கோடியை சுட்டி விட்டார்.
நான் படிக்காமல் போனதால் என்னை ஏமாற்றி விட்டார்கள். ஆகவே நான் முதலமைச் சரானால் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது கூறினார்.
வருங்கால ச.ம.உ
ஒரு படத்தில் வருங்கால ச. ம. உ. என்று கூறி அலப் பறையைக் கொடுத்தவர் ஞ்சா கருப்பு. இப்போது அதிமுக வில் இணைந்த தன் மூலம் அவர் நிஜமாகவே சட்டமன்ற உறுப்பினர் ஆவாரா என்பது கேள்விக் குறி..!
பாலா படத்தில் லொடுக்குப் பாண்டியாக அறிமுக மான கருணாஸ் எம்.எல்.ஏ ஆக வில்லையா? அதேபோல பாலாவின் பிதாமகன் படத்தில் அறிமுக மான கஞ்சா கருப்புவும் எம்.எல்.ஏ ஆனாலும் ஆகலாம்.... யார் கண்டா?