எப்படியாவது சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்பது எல்லோரது விருப்பம் மட்டுமல்ல... வாழ்க்கை கனவே அது தான். சிலரால் வீடு வாங்க முடிகிறது. பலரால் வீடு வாங்குவது சாத்தியப் படுவ தில்லை.
நடுத்தர மக்கள் பலர், நகருக்கு வெளியே ஏதாவது ஒரு சிறிய இடத்தை மலிவு விலையில் வாங்கிப் போட்டு விட்டால் போதும்.
பிற்காலத்தில் நல்ல விலைக்கு வந்தால் விற்கலாம் அல்லது அதிலேயே வீடு கட்டி கடைசி காலத்தில் பொழுதை கழிக்கலாம் என்று திட்ட மிட்டிருப் பார்கள்.
ஆனால் இவர்களில் பலரும் நிலம் வாங்கிய பிறகு பத்திரத்தை பீரோவில் வைத்து பூட்டுவதோடு சரி. இடத்தை நேரில் சென்று பார்ப்பதே இல்லை. எந்த பொருளாக இருந் தாலும் பாதுகாப்பும், பராமரிப் பும் மிக முக்கியம்.
சாதாரண பொருட்களுக்கே இப்படி என்றால், பல லட்சம் செலவு செய்து நிலம் வாங்கும் போது பாதுகாப்பு முக்கியம் அல்லவா நிலம் வாங்கு கிறீர்கள் என்றால் அதன் பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும்.
அதனால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் வில்லங்க சான்றிதழ் வாங்க வேண்டும்.
மனை உங்களுக்கு தான் சொந்தம் என்பதை உறுதிப்ப டுத்துகிற சான்றிதழ் தான் வில்லங்க சான்றிதழ்.
இதில் உங்கள் நிலம் யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப் பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடங்கி இருக்கும்.
வில்லங்க சான்றிதழ் வாங்க சார்பதிவாளர் அலுவல கத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்க வேண்டும். வில்லங்க சான்றிதழ் வாங்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு
முந்தைய 10 வருடங்களில் இருந்து தற்பொ ழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது.
வில்லங்க சான்றிதழ் உங்களின் பரிவர்த்த னையோடு முடிந்தது என்றால், அந்த நகலை கொண்டு பட்டாவின் பெயர் மாற்றத் திற்கு மனு கொடுக்கலாம்.
உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப் பட வேண்டும் எனில் உங்கள் தந்தையாரின் இறப்பு சான்றிதழ்
மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம்.
ஒரு வேளை பட்டா உங்களிடம் இல்லாத பட்சத்தில் உடனே தாலுகா அலுவலகம் சென்று உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து பட்டாவை வாங்குங்கள் நிலத்திற்கு உரிய வரியை செலுத்தி வருவது சிறந்தது.
கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அல்லது காம்பவுண்ட் சுவர் எழுப்பி பாதுகாப்பது நல்லது.
திடீர் உயிரிழ ப்புகள் ஏற்படும் பொழுது பலருக்கு தங்கள் தந்தைக்கு நிலம் இருப்பது தெரியும். ஆனால் நிலம் எங்கே இருக் கிறது என்று தெரியாமல் நிற்பார்கள்.
அதனால் உங்கள் நிலங் களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத்தகத்தில் குறித்து வைப்பது நல்லது. நிலத்தை வாங்கிய தோடு இருந்து விடாதீர்கள்.
அதை சில மாதங் களுக்கு ஒரு முறையா வது நேரில் சென்று பாருங்கள். அப்போது தான் அப்பகுதி வளர்ந்து வருகிறதா இல்லையா என்பதும், யாராவது இடத்தை ஆக்கிரமித்து இருக்கி றார்களா என்பதும் தெரியும்.
சில ரியல் எஸ்டேட் நிறுவன ங்கள் நிலம் விற்கும் போது மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்கு சொந்த பொறுப்பில் பாதுகாப்பதாக உறுதி அளிக்கி ன்றனர்.
எப்படியி ருந்தாலும் நாம் கஷ்டப்பட்டு வாங்கிய நிலம் நம் கண் காணிப்பில் இருப்பது தான் மிக மிக முக்கியம்