கரூரில் கைது செய்யப் பட்ட இரண்டு பெண் மாவோயி ஸ்டுகளில் ஒருவரான சந்திராவை வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட குற்ற வியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது.
கரூரில் சந்திரா, கலா என்ற பெண் மாவோயிஸ் ட்களை போலீஸார் கடந்த சில தினங் களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூரில் மாவோயி ஸ்ட்கள் பதுங்கியி ருப்பதை போலீஸார் கண்டறிந் தனர்.
இதை யடுத்து அங்கு வீட்டில் தங்கி யிருந்து கல்குவாரில் ஒன்றில் வேலை செய்து வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப் பட்டது. விசாரணை யில் அவர் தப்பியோடி வந்த மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (42) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர்.
கைது செய்யப் பட்ட 3 பேரும் அவ்வப் போது கேரளம், கர்நாடக மாநிலங்களின் மலைப் பகுதிக்கு சென்று, அங்கு பதுங்கி யிருக்கும் மாவோயிஸ்ட்
இயக்கத் தினரை சந்தித்து வந்தது விசாரணை யில் தெரிய வந்தது. இதில் ரீட்டா ஜாய்ஸ் மேரி, மதுரையைச் சேர்ந்தவர். சந்திரா, கலா ஆகியோர் கரூரைச் சேர்ந்தவர் கள்.
இந்நிலையில், கரூரில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 2 பேரில் ஒருவரான சந்திராவை கரூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகன வள்ளி முன்பு ஆஜர்படுத்தப் பட்டார். இதைய டுத்து வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்திர விட்டார்.
இதை தொடர்ந்து மாவோயி ஸ்ட் சந்திராவை பலத்த பாது காப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். பேரும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடுவர் மோகனவள்ளி முன் ஆஜர் படுத்தப் பட்டனர்.
அதில் மாவோயிஸ் டுகளை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ரிமாண்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை யடுத்து, திருச்சி மத்திய சிறைக்கு அவர்கள் கொண்டு செல்லப் பட்டனர்.