பஸ்களை எரிக்க தூண்டியது ஒரு பெண்... ஷாக் தகவல் !

பெங்களூரில் கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்திய கும்பலை ஒரு பெண் தலைமை யேற்று நடத்தியுள்ளார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகி றார்கள்.
பஸ்களை எரிக்க தூண்டியது ஒரு பெண்... ஷாக் தகவல் !
காவிரி தொடர்பாக பெங்களூரில் கடந்த 12ம் தேதி, திங்கள்கிழமை நடை பெற்ற வன் முறையின் போது, பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டன.

இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து ள்ளனர். இந்த இளைஞர்கள் போலீசில் அளித்த வாக்கு மூலம் அடிப்படையில், அக்கலவர பின்ன ணியில் ஒரு பெண் இருந்தது தெரிய வந்து ள்ளது. 

மூன்று வாலிபர்களுடன் ஒரு பெண், தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டுச் சென்றதாகவும், தன்னோடு சேர்ந்து வாகனங்களுக்கு தீ வைக்க வருமாறு அந்த பெண் அழைப்பு விடுத்த தாகவும் வாக்கு மூலத்தில் அவர்கள் தெரிவித் துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகை யில், இந்த பெண்மணி க்கு போட்டி டிராவல்ஸ் நிறுவன த்தோடு தொடர்பு இருக்க வாய்ப்புள் ளதை மறுக்க முடியாது. நாங்கள் அனைத்து கோணத் திலும் விசாரித்து வருகி றோம்.
கைது செய்யப் பட்டவர் களுக்கு அந்த பெண் குறித்து எதுவும் தெரிய வில்லை. அவரை தேடி வருகிறோம் என்று தெரிவி த்தார். இந்த பெண்மணி முகத்தில் துணி கட்டிக் கொண்டு வன்முறை வெறி யாட்டம் நடத்தி யதாகவும் கூறப் படுகிறது. 

கேபிஎன் உரிமையா ளர் நடராஜன் கூறுகையில், சுமார் 300 பேர் கொண்ட கும்பல் பஸ்களை தீக்கிரையா க்கியுள்ளது. நியாயம் கேட்டு கர்நாடக அரசிடமும் மனு அளிக்க உள்ளேன் என்றார்.
Tags:
Privacy and cookie settings