யோகா உங்கள் மனதை வலிமையாக்கும் !

2 minute read
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், மன நோய் சார்ந்த பாதிப்பு உள்ளவர்களுக்கும், உயர் ரத்தஅழுத்தம், இதய நோய்களுக்கும் யோகா சிறந்த நிவாரணம் அளிக்கிறது.
யோகா உங்கள் மனதை வலிமையாக்கும் !
உடலை மட்டு மல்லாமல் மனதையும் கட்டுப்படுத்தி சீராக வைத்துக் கொள்ளும் தன்மை யோகக் கலைக்கு உள்ளது. 

அந்த காலத்தில் யோகாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் பட்டதால் நோயற்ற வாழ்க்கை வாழ முடிந்தது.
சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது?
ஆனால் தற்போது யோகாவை ஒரு சிலரே கற்று பயிற்சி செய்து வருகின்றனர். நாம் நன்றாகத் தானே இருக்கிறோம்,  நமக்கு எதற்கு யோகா என்று நினைத்தால் அது தவறு.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலினாலும், நமது உடல் ஒரு பிரச்சினையை எதிர் கொள்கிறது. அதில் இருந்து நம்மைக் காக்க உதவுவது யோகா தான்.

தற்போது, மன அழுத்த நோய் பாதித்தவர் களுக்கும் யோகக்கலை மூலமாக குணமளிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவித் துள்ளன.

மூளைக்கு செல்லும் நரம்புகளை சீராக்க உதவும் யோகாக்களை செய்வதன் மூலமும்,  மன அழுத்தத்தை குறைத்து, 
அமைதியை அளிக்கும் யோகாக்களையும் முறையான பயிற்சியோடு செய்வதன் மூலமும் நிச்சயம் மன நோயாளிகள் மறு வாழ்வு பெறலாம் என்பது உறுதி. முதுகு வலிக்கும் யோகா சிறந்த நிவாரணம் அளிக்கிறது. 
மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி பயன்படுத்துவது?
இந்தியாவில் யோகாவிற்கு அவ்வளவு வரவேற்பு இல்லாவிட்டாலும், தற்போது வெளி நாடுகள்  பலவும் யோகா குறித்த ஆராய்ச்சிகளை மேம்படுத்தி வருகின்றன.

மேலும், தங்கள் நாட்டு மக்களிடையே யோகா குறித்த விழிப் புணர்ச்சியை ஏற்படுத்து கின்றன.
Tags:
Today | 15, April 2025
Privacy and cookie settings