எல்லையில் ஊடுருவ 100 பயங்கரவாதிகள் !

இந்தியாவில் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்துடன் எல்லையில் ஊடுருவ சுமார் 100 பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி யுள்ளது.
எல்லையில் ஊடுருவ 100 பயங்கரவாதிகள் !
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி பகுதியில் இருக்கும் ராணுவ தலைமை யகத்தின் மீது கடந்த மாதம் 18-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த 

பயங்கரவாதிகள் குண்டுகளை வீசியும், துப்பாக்கி களால் சுட்டும் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் பலியாகினர்.

இதையடுத்து, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின் றனர்.

இதற் கிடையே, கடந்தவாரம் பாகிஸ்தான் எல்லைக் குள் நுழைந்த இந்திய கமாண்டோ படையினர் அங்கிருந்த பயங்கர முகாம் களை அழித்த துடன் சுமார் 50 பயங்கரவா திகளை கொன்று குவித்தனர்.
இந்நிலை யில், உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு கமிட்டி யுடன் தீவிர ஆலோசனை நடத்தியது.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை மந்திரி மனோகர் பரிக்கர் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத் தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவிவரும் தற்போதைய நிலவரம் 

மற்றும் பிறநாடுகளு டனான இந்தியா வின் சர்வதேச எல்லைப் பகுதியில் நிலவும் சூழ்நிலை தொடர்பாக விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடைபெற் றதாக டெல்லி வட்டா ரங்கள் தெரிவித் துள்ளன.

இதற் கிடையே, இந்தியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் எல்லையில் சுமார் 100 பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு 
தயாராக இருப்பதாக இந்த கூட்ட த்தின் போது பிரதமருக்கு தெரிவிக்கப் பட்டதாக அங்குள்ள வட்டார ங்கள் தெரிவிக் கின்றன. 

உளவுத் துறை தகவல் களை மேற்கோள் காட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்ச ரிடம் இந்த தகவலை விவரித் தாக கூறப் படுகிறது.
Privacy and cookie settings